சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடிவாங்கிய 2D நிறுவனம்.. பாலாவால் சுதா கொங்காராவிற்கு வந்த தலைவலி

சுதா கொங்காரா 2D நிறுவனத்திற்கு அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறார். இன்னும் 2D நிறுவனம் அந்த படத்திற்கு என் ஒ சி கொடுக்கவில்லை. சூர்யா கொடுக்க சொல்லியும் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர்.

புறநானூறு படம் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து பின்னர் ட்ராப் ஆனது. அதன் பின் இப்பொழுது அந்தப் பெயரை மற்றும் மாற்றி சிவகார்த்திகேயனை வைத்து இந்த கதையை எடுக்கவிருக்கிறார் சுதா கொங்காரா. சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படத்தை முடித்த பின்னர் இந்த படம் ஆரம்பிக்க இருக்கிறது.

ஏற்கனவே பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யா தான் முதலில் கமிட்டாகி நடித்தார். ஒரு மாதம் இந்த படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா கலந்து கொண்டார். அதன்பின் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து விலகினார் சூர்யா.

பாலாவால் சுதா கொங்காராவிற்கு வந்த தலைவலி

பின்னர் பாலா இந்த படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக போட்டு எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய உள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கு பாலா தரப்பிலிருந்து சுமார் 8 கோடி ரூபாய் வரை செலவு செய்துவிட்டனர். சூர்யாவின் 2D நிறுவனம் தான் இதை தயாரித்து வந்தது.

பாலா வணங்கான் படத்திற்கு செலவு செய்த தொகையை சமாளிக்க முடியாமல் திணறி வரும் பொழுது, சுதா கோங்காராவின் புறநானூறு படத்திற்கு 20 கோடி ரூபாய் செலவழிந்துள்ளது. ஆர்டிஸ்ட் அட்வான்ஸ், செட் போன்றவைகளுக்கு இவ்வளவு தொகை ஆகியுள்ளது. பாலா செய்த செலவால் 2d நிறுவனம் சுதா கோங்காராவுக்கு காசு கொடுக்காமல் இழுத்தடிக்கிறது அந்த நிறுவனம்.

Trending News