சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

உண்மைய சொல்றவங்கள பைத்தியமா பாக்குற உலகம்.. விமலுக்கு கம்பேக் கொடுக்குமா சார்.? ட்ரெய்லர் எப்படி இருக்கு

Sir Movie Trailer: எதார்த்த நாயகனாக ஒரு காலத்தில் வெற்றிகரமாக வலம் வந்த விமல் இப்போது பல சரிவுகளை சந்தித்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவர் நடிக்கும் ஒரு சில படங்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

இருந்தாலும் தற்போது அவர் சார் படத்தின் மூலம் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சாயாதேவி கண்ணன், சரவணன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியான போதே படம் 80 காலகட்டத்தில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டது.

அதில் விமலின் தோற்றமும் கதாபாத்திரமும் கூட கவனம் பெற்றது. அந்த வகையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே வாத்தியாராக கிராமத்திற்கு வரும் விமல் என் பெயர் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

சார் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

அதைத்தொடர்ந்து மஞ்சள் கலர் ஸ்கூட்டரில் வரும் அவரை கிராம மக்கள் கிண்டல் அடிப்பதும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளின் சேட்டையும் என ட்ரெய்லர் நகைச்சுவை கலந்து பயணிக்கிறது. அதை அடுத்து வழக்கம்போல கிராமத்தில் இருக்கும் தலை கட்டால் பிரச்சனை ஏற்படுகிறது.

பள்ளிக்கூடத்தை இடிக்க நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தை விமல் எதிர்க்கிறார். அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளும் இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை என தெரிகிறது.

இப்படி உண்மைக்கு நெருக்கமான கதையாக இருக்கும் இந்த சார் நிச்சயம் கவனம் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி நல்ல தரமான கதைகளை தேர்வு செய்யும் விமல் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இதன் மூலம் தொடங்கட்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ரிலீசுக்கு தயாராகும் விமலின் சார்

Trending News