பணம், அதிகாரத்தை விட ஒருத்தன் பின்னாடி நிற்கிற கூட்டம் தான் பவரு.. விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Hitler Trailer: தனா எஸ் ஏ இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் மேனன், சரண்ராஜ், ரெடிங் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் ஹிட்லர் படம் உருவாகி இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.

இதன் ஆரம்பத்திலேயே ஒரு ஆயுதம் உருவாகும் போதே அதன் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது என்ற வாசகத்தோடு தொடங்குகிறது. அதை அடுத்து ஒரு மனிதனுக்கு பணம் அதிகாரம் பவர் கிடையாது. பின்னாடி நிக்கிற கூட்டம் தான் பவர் என வரும் வசனம் இது அரசியல் ரீதியான கதை என சொல்கிறது.

அதை அடுத்து போலீசாக வரும் கௌதம் மேனன் அரசியல்வாதியாக வரும் சரண்ராஜ் என டிரைலர் விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது. இதில் விஜய் ஆண்டனி வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் காதல் காமெடி என கலக்குகிறார்.

ஹிட்லர் விஜய் ஆண்டனிக்கு வெற்றியா.?

அதே சமயம் அதிரடி ஆக்ஷனில் இன்னொரு அவதாரத்தையும் காட்டுகிறார். எத்தனை கோடி செலவானாலும் எத்தனை தலை உருண்டாலும் தேர்தலில் ஜெயிக்கணும்.

மக்கள் நாம செஞ்ச தப்ப மறந்திடுவாங்க. அதனாலதான் அஞ்சு முறை தேர்தலில் ஜெயிச்சிருக்கோம் போன்ற பஞ்ச வசனங்களும் கவனம் பெறுகிறது. இந்த வருடம் அடுத்தடுத்து விஜய் ஆண்டனியின் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

அதில் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு ஹிட்லர் வெற்றியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ட்ரெய்லர் வெளியானது