ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரியங்காவுக்கு ஜால்ரா தட்டும் 6 பிரபலங்கள்.. ஆட்டத்தை மாற்றும் விஜய் டிவியின் மாஸ்டர் பிளான்

VJ Priyanka: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் மணிமேகலை, பிரியங்கா விவகாரம் தான் பேசப்பட்டு வருகிறது. யூடியூப் சேனல்கள் கூட இதைப்பற்றிய விவாதத்தில் தான் தற்போது களமிறங்கியுள்ளது.

ஒரு சிலர் இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயமா என கண்டும் காணாமல் சென்று விடுகின்றனர். ஆனால் இந்த பிரச்சனை எல்லாத் துறையிலும் இருக்கு. சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் விவகாரம் தான் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அதன்படி மணிமேகலைக்கு ஆதரவாக அனைவரும் இறங்கிய நிலையில் பிரியங்கா தரப்பில் இருந்து மௌனம் தான் பதிலாக கிடைத்தது. ஆனால் தற்போது விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொருவராக பிரியங்காவுக்கு ஆதரவாக பேச தொடங்கி விட்டனர்.

அதன்படி சூப்பர் சிங்கர் பூஜா பிரியங்காவுக்கு ஆதரவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அதில் இது போல் ஒருவரை டார்கெட் செய்து காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் பிரியங்காவின் நெருங்கிய தோழியான பாவனி ரெட்டியும் தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நேற்று சுனிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா பேசும் போது மணிமேகலை குறுக்கிட்டு அதை தடுத்தார். எல்லோருக்கும் பேச உரிமை இருக்கிறது என வெளிப்படையாகவே தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியின் மாஸ்டர் பிளான்

அதேபோல் குரேஷியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சம்பவ நாளன்று பிரியங்கா பேசும் போது மணிமேகலை குறுக்கிட்டார். அதன் பிறகு தான் பிரச்சனை பெரிதானது. இதில் யாரும் அவரை மன்னிப்பு கேட்க சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரியங்கா இந்த பிரச்சனை முடிந்து வரும்போது நிகழ்ச்சி தரப்பிடம் என்னை காயப்படுத்தியது குறித்து மணிமேகலை பேச வேண்டும் என சொல்லி இருக்கிறார். அதையும் குரேஷி சொல்லிவிட்டு ஆனால் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை என பல்டி அடித்துள்ளார்.

இதனால் கடுப்பான மணிமேகலை ஆர்மி அவரை வச்சி செய்து வருகின்றனர். அதேபோல் விஜய் டிவி புகழிடம் கூட இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அவர் எஸ்கேப்பாகும் விதமாக இது அவர்கள் பிரச்சனை எதற்காக மைக்கை தூக்கிக்கிட்டு வரிங்க என கூறியிருந்தார்.

மேலும் நடிகை ஷகிலா கூட பிரியங்காவுக்கு ஆதரவாக தான் பேசி இருக்கிறார். மணிமேகலைக்கு பொறாமை அதனால் தான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார். அதைக் கேட்டு பல சேனல்கள் பிரியங்கா பற்றி தவறாக பேசுகிறார்கள் என தெரிவித்துள்ளார். இப்படி பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக ஜால்ரா போட தொடங்கி விட்டனர்.

இது எல்லாமே விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் தான். இப்போது மொத்த தவறையும் மணிமேகலை பக்கம் திருப்புவதற்கு சில இணைய கூலிப்படைகளும் வேலை செய்கிறதாம். ஆனாலும் ரசிகர்கள் இதை ஏற்பதாக இல்லை.

பிரியங்காவுக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்

Trending News