வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதிர் செய்த காரியத்துக்கு ராஜியை திட்டி தீர்க்கும் கோமதி.. செந்தில் விட்ட சவாலுக்கு உதவி செய்யும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ராஜியின் தேவைக்காகவும் அப்பாவிடம் எந்த அவமானமும் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் கடுமையாக உழைத்து ராஜியை சந்தோசமாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் கோமதி தன்னுடைய பிள்ளை இவ்வளவு தூரம் கஷ்டப்படுவதற்கு ராஜிதான் ஒரு காரணம் என்று நினைக்கிறார்.

இதனால் மீனா மற்றும் அரசிடம் கோபத்துடன் கோமதி பேசுகிறார். அந்த நேரத்தில் ராஜி வந்து அத்தை நான் ஏதாவது உதவி பண்ண வேண்டுமா என்று கேட்கிறார். அதற்கு கோமதி நீ செய்தது வரை போதும். உன்னால தான் என் பிள்ளை இவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறான். உனக்கு அப்படி என்ன செலவு இருக்கிறது பேராசைப்படுகிறாய். உனக்காகத்தான் என் பிள்ளை கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்து கொண்டிருக்கிறான் என்று சொல்கிறார்.

ராஜியால் தான் கதிர் கஷ்டப்படுகிறான் என தவறாக நினைக்கும் கோமதி

அதற்கு ராஜி நான் என்ன பண்ணினேன் என்று கேட்கிறார். ஆமாம் கொடுத்த காசு உனக்கு காணவில்லை என்றுதான் டியூஷன் எடுக்க போனாய். இதனால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வந்தது. அதனால் தான் கதிர் இன்னும் அதிகமாக வேலை பார்த்து உன்னிடம் பணத்தை கொடுப்பதற்காக கஷ்டப்படுகிறான் என்று சொல்லி மொத்த கோபத்தையும் ராஜியிடம் கோமதி கொட்டுகிறார்.

இதனை கேட்ட ராஜி மனசு கஷ்டப்பட்டு ரூமுக்குள்ள போய் அழுது புலம்புகிறார். எல்லாம் நான் பண்ணுன தப்புதான் வீட்டை விட்டு ஓடினது தப்பு என்றால், அதை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அப்பொழுதே பிரச்சனையே முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் கதிரை கல்யாணம் பண்ணி இப்பொழுது நானும் கஷ்டப்பட்டு இந்த குடும்பமும் கஷ்டப்படுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறேன் என்று புலம்புகிறார்.

அதே மாதிரி கதிரும் வண்டி ஓட்டிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டு தூக்கத்தை கண்ட்ரோல் பண்ணி விடிய விடிய வேலை பார்க்கிறார். மறுநாள் கதிர் வந்ததும் கோமதி ஆறுதல்படுத்தும் விதமாக அன்பாக பேசுகிறார். அப்பொழுது கதிர் ஒரு காபி வேணும் என்று கேட்ட பொழுது கோமதி ஆசையுடன் போட்டுக் கொடுக்கிறார். இதையெல்லாம் தாண்டி தங்கமயில் மற்றும் ராஜி வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பக்கத்தில் நின்னு வேடிக்கை பார்த்த மீனா நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த பாண்டியன், மீனாவிடம் இங்கிலீஷ் பேப்பரை கொடுத்து நீ கேட்ட பேப்பர் இந்த வாங்கிக் கொள் என்று சொல்கிறார். தினமும் இதே மாதிரி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி செந்தில் விட்டசவாலுக்கு ஒரு விதத்தில் பாண்டியன் உதவி செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் தங்கமயில் இடம் நீயும் அந்த இங்கிலீஷ் பேப்பர் வாங்கி படிச்சு அறிவை வளர்த்துக் கொள் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் நான் இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறதாவது என்று மனசுக்குள்ளயே பேசிக் கொள்கிறார். ஆக மொத்தத்தில் கதிர் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் வேலை பார்ப்பதற்கு ராஜிக்காகத் தான் என்று திட்டு வாங்கிக் கொள்கிறார். செந்தில், மீனாவின் அப்பாவிடம் சவால் விட்டதற்கு பாண்டியன் மறைமுகமாக உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் செந்தில் விட்ட சவால்படி ஜெயிக்கும் விதமாக கவர்மெண்ட் வேலை வாங்கி மீனா மற்றும் செந்தில் ஒரு நல்ல உத்தியோகத்திற்கு போய்விடுவார்கள் என்பது போல் தெரிகிறது. இவர்களை தொடர்ந்து ராஜி மற்றும் கதிர் படிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட வேலையாக நல்ல வேலையில் செட்டில் ஆகி அவர்களுக்கான செலவையும் அவர்களை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். இந்த தங்கமயில் தான் என்ன பண்ணப் போகிறாரோ தெரியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News