விடாமுயற்சி படம் பல போராட்டங்களுக்கிடையே ஒரு வழியாக 90 சதவீதம் முடிந்துவிட்டது. இனிமேல் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறது. வெளிநாட்டு பாட்டு ஒன்று எடுப்பதாக இருந்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் லைக்காவின் நிதி நெருக்கடி காரணமாக அந்த பாட்டை கேன்சல் செய்து விட்டனர்.
இந்நிலையில் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்காக அஜித் டப்பிங் பேசி வருகிறார். இதனிடையே ஆதிக்க ரவிசந்திரனின் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்.
விடாமுயற்சி படம் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள். அஜித்துக்கு முதலில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லை. அதன் பின் பண பிரச்சனையில் படம் சூட்டிங் நின்னு போனது. நடிக்கும் ஆர்டிஸ்ட்களிடம் ஏகப்பட்ட ஈகோ பிரச்சனைகள். ஒருவருக்கொருவர் சூட்டிங் ஸ்பாட்டில் பேசிக்கொள்வது கூட கிடையாதாம்.
கலர் கலரா ஆதிக்குடன் செய்யும் வேலை
அஜித் விடாமுயற்சி சூட்டிங் சென்று விட்டாலே கொஞ்சம் இறுக்கமான மனநிலையில் தான் காணப்படுவாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதுமே டென்ஷனாக தான் இருப்பாராம். அஜர்பைஜானின் பல பிரச்சனைகளுக்கு இடையே இந்த படத்தின் சூட்டிங் நடை பெற்றது. அதன் பின் சென்னை மற்றும் ஹைதராபாத்திலும் அஜித் நடித்து முடித்தார்.
விடாமுயற்சி டென்ஷனை அஜித் வேறு ஒரு விதமாக கழித்து வருகிறார். ஆதிக்ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படம் சூட்டிங்கிற்கு சென்று விட்டாலே மனுஷன் செம ஹேப்பி ஆகி விடுவாராம். இந்த படத்தில் அவருக்கு மூன்று விதமான கதாபாத்திரங்கள் கலர் கலராக சட்டையை போட்டுக்கொண்டு ரவிச்சந்திரன் உடன் லூட்டி தான் நடக்குமாம். ஆதிக் ஒரு டிரெண்டியான இயக்குனர், அஜித்தை மிகவும் கவர்ந்து விட்டாராம்.