திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ஹீரோக்களை மிஞ்சிய 5 வில்லன்களுடைய சொத்து மதிப்பு.. அனுபவிக்காமல் அற்பாயிசில் போன டேனியல் பாலாஜி

சினிமாவில் இன்று ஏ கிரேடு ஹீரோக்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். விஜய், அஜித், ரஜினி போன்ற முதன்மை ஹீரோக்கள் இதற்கு மேலேயும் ஒரே படத்தில் நடித்து சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால் சில ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு வில்லன் நடிகர்கள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளனர். அவர்களுள் முதல் 5 இடத்தில் இருக்கும் கோடீஸ்வரர்கள்.

ஆசிஸ் வித்யார்த்தி: தில் படத்தில் டிஎஸ்பி சங்கராக மிரட்டிய கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. படத்துக்கு இரண்டு கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார் ஆசிஸ் வித்யார்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தில், தமிழ், பகவதி ஏழுமலை என சினிமாவில் கலக்கிய இவரின் சொத்து மதிப்பு 88 கோடிகளாம்.

பிரகாஷ்ராஜ்: வில்லன், குணச்சித்திரம், காமெடி என எல்லா கதாபாத்திரமும் இவருக்கு அத்துபடி. படத்துக்கு மூன்று கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவருடைய இன்றைய சொத்து மதிப்பு 46 கோடிகள்.

ராணா டகுபதி: அஜித்தின் ஆரம்பம் படத்தில் அவருக்கு நண்பராக வருவார். ராஜமௌலி, பாகுபலி படத்தில் வில்லன் பல்வால்தேவனாக நடித்த இவரை விட்டால், வேறு யாருக்கும் அந்த கதாபாத்திரம் பொருந்தி இருக்காது. படத்திற்கு ஐந்து கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் சொத்து மதிப்பு 43 கோடிகளாம்

முகேஷ் ரிஷி: வில்லனாக மட்டுமே நடிக்கும் இவரை கேப்டன் விஜயகாந்த்தின் வல்லரசு படத்தில் தீவிரவாதி வாஷிம் கான் என்றால் அனைவருக்கும் தெரியும். இவருக்கு ரமணா படத்தில் நல்லதொரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து முருகதாஸ் மிரட்டி இருப்பார். படத்துக்கு 50 லட்சங்கள் வரை வாங்குகிறார். இவரின் சொத்து மதிப்பு இன்று 30 கோடிகள்.

டேனியல் பாலாஜி: 8 கோடிகள் வரை இவரிடம் சொத்து இருந்துள்ளதாம், ஆனால் தன்னுடைய தீய பழக்கத்தால் அனைத்தையும் இழந்து விட்டாராம். படத்திற்கு 75 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார். பொல்லாதவன், பைரவா, பீகில் என நன்றாக நடித்து வந்த இவர் தன்னுடைய 49-வது வயதிலேயே இறந்துவிட்டார்.

- Advertisement -spot_img

Trending News