சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

என்னது.. இவர்தான் தளபதி 69 வில்லனா? ஆட்டநாயகனின் கடைசி வில்லன்

விஜய் நெற்றியில் பொட்டு இருக்கா இல்லையா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, அவர் கடைசி படத்திற்கு பிறகு, நலிந்த தயாரிப்பாளர்களுக்காக ஒரு படம் பண்ணி கொடுப்பாரா? அவருடைய கடைசி படமாக கருதப்படும் தளபதி 69 படத்தில் வில்லன் யார் என்பது தான் முதன்மை கேள்வியாக உள்ளது.

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து, விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளார் என்பதையே ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த நிலையில், அவர் கடைசியாக நடிக்கவிருக்கும் “தளபதி 69” படத்தின் மீதுதான் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உள்ளது. கோட் படம் 1000 கோடி வசூல் செய்யுமோ இல்லையோ, கண்டிப்பாக தளபதி 69 வசூல் செய்யும்.

விஜய்-யின் கடைசி படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். நடிகை சிம்ரன் அல்லது நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் முக்கிய கதாபாத்த்திரத்தில் மமித பைஜூ நடிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே “கத்தி”, “பீஸ்ட்”, “மாஸ்டர்”, “லியோ” என 4 படங்களுக்கு இசையமைத்த அனிருத், தற்போது விஜய்-யின் “தளபதி 69” படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லனாக பாலிவுட் வில்லன் பாபி தியோல் நடிப்பார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

bobby-deol
bobby-deol

ஆனால் இந்த நேரத்தில் ஒரு சில நெட்டிசன்கள், பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும். அவர்கள் காம்போவில் ரீசண்டாக எந்த படமும் அமையவில்லை, முக்கியமாக பிரகாஷ் ராஜை வில்லனாக பார்த்தே பல வருடமாகிறது. அவர் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News