ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தொண்டை தண்ணி வற்ற ரசிகர்களை புலம்ப வைத்த அஜித்.. வயிற்றில் பாலை வாத்த அர்ஜுன்!

விடாமுயற்சி இப்போது தான் விடிவு காலம் பிறந்துள்ளது. ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்கிற என்னத்துக்கு வந்து விட்டார் மகிழ் திருமேனி. ஆனாலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் முடிந்த பாடில்லை. ஏன் என்றால், அஜித்தே இன்னும் 15 நாள் காட்சிகளில் நடிக்க வேண்டியது பாக்கியுள்ளதாம்.

இப்படி இருக்க, விடாமுயற்சி படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்று சொன்னார்கள். கொஞ்சம் நாட்கள் கழித்து, பொங்கலுக்கு என்றார்கள். ஆனால் “ரெண்டும் இல்ல.. கிறிஸ்துமஸ் ” க்கு என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்துள்ளார் அர்ஜுன்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே ‘விடாமுயற்சி’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

படத்தை எப்போ தான் ரிலீஸ் பண்ணுவீங்க என்று கேட்டு கேட்டு ரசிகர்களுக்கும் சலித்து போன நேரத்தில் தான் படம் பற்றி அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க ஆரம்பித்தனர். இருப்பினும், அஜித் ரசிகர்கள் தாண்டி, வேறு யாருக்கும் படம் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பது தான் உண்மை.

இப்படி இருக்க, நடிகர் அர்ஜுன் இதுகுறித்துப் பேசுகையில், “சமீபத்தில் தான் விடாமுயற்சிக்கு கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து முடித்தோம். தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி திரைக்கு வரும்” என்று கூறினார். இது அஜித் ரசிகர்களிடம் ஒரு உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, லைகா நிறுவனம் தற்போதெல்லாம், எந்த படத்துக்கும் சரியாக ப்ரோமோஷன் செய்வத்த்தில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அடுத்து வரவிருக்கும் வேட்டையன் படத்துக்கும் இதுவரை ஹைப் ஏற்றும் வகையில் எந்த ப்ரோமோஷனும் நடைபெறவில்லை. அதே போல தான், விடாமுயற்சியும், கிணற்றில் போட்ட கல் போல இருந்து, இப்போது மீண்டு வரும் நேரத்திலும், லைகா எந்த சப்போர்ட்டும் கொடுக்காமல் இருக்கிறது.

Trending News