ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சன் டிவி சேனலை தூக்கி நிறுத்தும் டிஆர்பியின் 5 சீரியல்கள்.. போட்டி போட்டு முன்னுக்கு வந்த விஜய் டிவியின் கதாநாயகன்

Serial TRP Rating List: என்னதான் பெரிய நடிகர்களின் படங்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களை திருப்தி படுத்தினாலும், தினமும் வீட்டிலிருந்து பார்க்கக்கூடிய சின்னத்திரை சீரியல்கள் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் ஆதரவு மூலம் தான் எந்த சீரியல்கள் அதிக இடத்தை தக்க வைத்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் கணித்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சேனல்கள் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஆட்டம் காட்டும் விஜய் டிவியின் நாயகன்

மருமகள்: ஆதிரை மற்றும் பிரபுவை சேர்த்து வைக்கும் விதமாக இவர்களுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று இரு குடும்பங்களும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதில் ஏகப்பட்ட பிரச்சினைகளை செய்து இருவரையும் பிரிக்கும் விதமாக சதியும் நடந்து வருகிறது. இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக எப்படியாவது ஆதிரையை கல்யாணம் பண்ண வேண்டும் என்று பிரபு தீர்மானமாக இருக்கிறார். அப்படிப்பட்ட இந்த சீரியல் இந்த வாரம் 7.77 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் அதற்குள் 8.11 புலிகளை பெற்று நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதில் நந்தினி மற்றும் சூர்யாவின் எதார்த்தமான நடிப்பும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரொம்பவே நன்றாக வொர்க் அவுட் ஆகுது என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

சிறகடிக்கும் ஆசை: சன் டிவிகிட்ட எப்படியாவது முட்டி மோதி ஜெயிக்க வேண்டும் என்று விஜய் டிவி சேனல் கைவசம் வைத்திருப்பது சிறகடிக்கும் ஆசை சீரியலில் கதாநாயகனாக இருக்கும் முத்துவின் கேரக்டரை தான்.

அந்த வகையில் முத்து மற்றும் மீனாவின் நடிப்பு மக்களை கவர்ந்ததால், விடாமல் இந்த நாடகத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் தற்போது மீனா மற்றும் முத்துவுக்கு விரிசல் வரும் விதமாக ரோகிணி, சத்யாவின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போகிறார். இதன் மூலம் என்ன பிரச்சினையாக போகிறது என விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதைநகர்ந்து வருகிறது. இந்த வாரம் 8.22 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: ஆனந்தியின் குடும்ப பிரச்சினையை தீர்க்கும் விதமாக மகேஷ் மற்றும் அன்பு இருவரும் போராடி வருகிறார்கள். அந்த வகையில் அன்பு அவருடைய வீட்டு பாத்திரத்தை வைத்து பணத்தை கொடுக்கலாம் என்று நினைக்கும் பொழுது அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பிறகு மகேஷ், அன்புவிடம் பணத்தை கொடுத்து ஆனந்தியின் பிரச்சினை சரி செய்ய சொல்கிறார். இதை கெடுக்கும் விதமாக சவரக்கோட்டையில் பல திருப்பங்கள் நடைபெறப் போகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் 8.49 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: எழிலுக்கும் கயலுக்கும் எப்பொழுது தான் கல்யாணம் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த தருணம் கிட்ட நெருங்கி விட்டது. ஆனாலும் சிவசங்கரி தீபிகாவின் சூழ்ச்சி மற்றும் பெரியப்பா வடிவு செய்யும் அலப்பறைகளால் கல்யாணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர இருக்கிறது. இதையெல்லாம் தடுக்கும் விதமாக கயல் அவருடைய கல்யாணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு போராடி வருகிறார். கடந்த சில வாரங்களாக இந்த நாடகம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் 8.83 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

Trending News