திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

வேட்டையன் ஆடியோ வெளியீட்டுக்கு வரும் விஐபி.. அமிதாப்பச்சன் எஸ்கேப்பானதால் போட்ட பலே ஸ்கெட்ச்

வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நேரு  இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான   டிக்கெட்டுகளை பெரும்பாலும் வி வி ஐ பிகள் மட்டுமே பெற்றுள்ளனர். நார்மல் ஆடியன்ஸ்க்கு ஒரு குறிப்பிட்ட  அளவு டிக்கெட் மட்டும் தான் விற்கப்பட்டது.

இன்று அதிகாலையில் இருந்தே அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.  விஐபிகளுக்கு என்று தனியான வேறொரு பாதையை அமைத்து  அனுமதி கொடுக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சீப்  கெஸ்ட்டாக அமிதாப்பச்சன் வருவதாக இருந்தது.

அமிதாப்பச்சன் எஸ்கேப்பானதால் போட்ட பலே ஸ்கெட்ச்

ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார் அமிதாப்பச்சன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர இயலவில்லை. அதனால் இன்று நடக்கவிருக்கும் விழாவிற்கு சீப் கெஸ்ட்டாக நடிகர் மோகன்லால் கலந்து கொள்கிறார்.

மோகன்லால் இந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அடுத்து லைக்கா தயாரிக்கவிருக்கும் படம் லூசிபர் இரண்டாம் பாகம்.  இந்த படம் மூலம் லைக்காவிற்கு  நெருங்கிய வட்டாரத்துக்குள் வந்து விட்டார் மோகன் லால். அதனால் ஆடியோ லான்ச்சுக்கும் முக்கியமான விருந்தாளியாக வந்துவிட்டார்.

வேட்டையன் முடிந்த கையோடு கூலி படத்தையும் முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன் பின் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்  மோகன்லாலுக்கு ரஜினிக்கு இணையான கதாபாத்திரம். ஏற்கனவே முதல் பாகத்தில் மேத்யூஸ் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் லால்.

Trending News