ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

புது வரவாக வந்த 7 படங்கள்.. வசூலில் திணறும் கோட்

Goat Collection: விஜய்யின் கோட் படம் வெளியாகி 16 நாட்களாகி இப்போதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த சூழலில் கடந்த இரண்டு வாரங்களாக புதுப்படங்கள் எதுவும் வெளியாகாததால் கோட் படம் வசூல் வேட்டையாடி வந்தது. ஆனால் இப்போது அதற்கு முட்டுக்கட்டையாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட ஏழு படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து, சசிகுமாரின் நந்தன், கோழி பண்ணை செல்லதுரை, கடைசி உலகப்போர் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. லப்பர் பந்து படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது. இதனால் இந்த படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கோட் 16வது நாள் வசூல்

ஆரம்பத்தில் கோட் படம் 5000 திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்போது புது வரவாக வந்துள்ள படங்களால் தியேட்டர் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது படம் வெளியாகி பதினாறு நாட்கள் ஆன நிலையில் 425 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

மேலும் 500 கோடி வசூலை கோட் படம் பெருமா என்பதே சந்தேகம் தான். லியோ படம் ஒரு நல்ல வசூலை பெற்ற நிலையில் இப்போது கோட் வசூலில் திணறி வருகிறது. ஆனாலும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும் போட்ட பணத்தை எடுத்து விட்டனர்.

டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் ஆகியவை பெரும் தொகைக்கு ஒதுக்கப்பட்டதால் அதன் மூலம் லாபத்தை பெற்றுள்ளனர். விஜய்க்கு கோட் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அவரது கடைசி படமான தளபதி 69 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

வசூலில் திணறும் கோட்

Trending News