சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

GOAT Box Office – 16வது நாள் முடிவில் ‘தி கோட்’ வசூல் ரிப்போர்ட்.. வாயிலே வடை சுட்ட வெங்கட் பிரபு டீம் தப்பித்ததா.?

ஓவர் ஹைப் ஏற்றி வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் 16வது நாள் முடிவில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்ற பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் ‘தி கோட்’.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜாவின் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை ரூ.400 கோடியில் பிரமாண்டமான தயாரித்திருந்தது.

இப்படம் வெளியாகும் முன்பே இப்படத்திற்கான புரமோசன் வேலைகளின்போது, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் ‘ஓவர் ஹைப்’ ஏற்றிவிட்டனர். ஒருபடத்திற்கு இவ்வளவு ‘ஹைப்’ இருக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

தளபதிக்கே மாஸ் என்றால், இளையதளபதி இதில் நெகட்டிவ் ரோலில் அதகளம் பண்ணியிருக்கிறார் அதனால் இப்படம் அட்லியின் ஜவான் படம் மாதிரி ரூ,.1000 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என்றும் இப்படத்தில் நடித்தவர்கள் கூறியிருந்த நிலையில் இன்று 16 வது நாள் முடிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்று பார்ப்போம்!

தி கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடிகள் வசூலித்தது. அடுத்து, முதல் நான்கு நாட்க்ளில் ரூ,.288 கோடிகள் வசூலித்தது. 2 வாரங்கள் தாண்டி 13 நாட்களில் இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில், இன்று இப்படம் வெளியாகி இன்று 16 வது நாள் முடிவில் தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ் நாட்டில் தனியாக இப்படம் 1500 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான போதிலும் போட்ட முதலீட்டையே இப்படம் 10 நாட்களுக்கு மேல்தான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் 16வது நாள் முடிவில் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகின்றன. புதிதாக படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தி கோட் படம் இன்னும் ஒருவாரம் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்கலாம் எனவும் அப்போது அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News