Memes: இப்போது சோசியல் மீடியாவில் திருப்பதி லட்டு பிரச்சனை தான் கொழுந்துவிட்டு எரிகிறது. பல மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவதும் வாங்குவதும் இந்த லட்டுவை தான்.
ஆனால் அதில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருக்கிறது என வெளிவந்த தகவல் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதிலும் சுத்த சைவமாக இருக்கும் மக்கள் நொந்து போய் இருக்கின்றனர்.
இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இதற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே சமயம் லட்டு மாதிரி கன்டென்ட் கிடைக்கும்னு பார்த்தா லட்டே கன்டென்டா கிடைச்சிருக்கு என நெட்டிசன்கள் ஒரு பக்கம் குதூகலித்து வருகின்றனர்.
மேலும் புரட்டாசி அதுவுமா லட்டு சாப்பிட்டு வந்திருக்கியா என நக்கல் மீம்ஸ் கூட வைரல் ஆகி வருகிறது. அதே போல் பிரியாணிக்கு பீப் கிடைக்கல அதான் திருப்பதி லட்டு போட்டு செஞ்சேன் என ஏகப்பட்ட மீம்ஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் திருப்பதி லட்டு மீம்ஸ்
- திருப்பதிக்கு போயிட்டு வர்றவங்க எல்லாரும் அசைவம் தான்
- நாலு இடத்துக்கு போக கார் வாங்குனேன்
- அண்ணே அந்த ஆடு முறைக்கிது