Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் இப்போது வேட்டையன் மற்றும் கூலி படங்கள் இருக்கிறது. வேட்டையன் படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் இப்போது தடபுடலாக நடந்து வருகிறது. சமீபகாலமாக ரஜினியை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களை எடுத்துக் கொண்டால் இரண்டு கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருவதாக சினிமா விமர்சகர் கிண்டல் அடித்து பதிவு போட்டிருக்கிறார். அதாவது ரஜினியை அடிக்கடி வம்புக்கு இழுப்பவர் ப்ளூ சட்டை மாறன்.
அவரது படங்கள் வெளியாகும் போது அதிகம் ட்ரோல் செய்து பதிவு போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நேற்றைய தினம் வேட்டையன் படத்தின் நிகழ்ச்சி நடந்த நிலையில் அதையும் விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.
ரஜினியை சீண்டி ப்ளூ சட்டை போட்ட பதிவு
அதாவது தலைவர் ரெண்டு கேரக்டர் தான் அடிக்கடி உருட்டிக்கொண்டு இருக்காரு. டெரர் போலீசாக தர்பார், ஜெயிலர் படங்களில் நடித்த நிலையில் இப்போது வேட்டையன் படத்திலும் அதே போல் தான் நடித்திருக்கிறார். டெரர் போலீஸ் இல்லையென்றால் அடுத்த கேரக்டரில் டெரர் தாதா தான்.
காலா, கபாலி படங்களில் அவ்வாறு நடித்த நிலையில் இப்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்திலும் தாதாவாக ரஜினி நடிக்கிறார். இதைவிட வேடிக்கையாக வேட்டையன் படத்தில் இயக்குனர் ஒரு சம்பவம் செய்திருக்கிறார். அமிதாப் பச்சன் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவருக்கு பிரகாஷ்ராஜ் தான் டப்பிங் கொடுத்துள்ளார். இது செம காமெடியான விஷயம். படம் எப்படி இருக்குன்னு பாப்போம் என்று ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
ப்ரோமோஷனில் படுபயங்கரம் காட்டும் வேட்டையன்
- மாமா ரஜினி இருக்கிற தைரியத்துல குட்டி தம்பி பேசிய பேச்சு
- சகுனி, சாணக்கியன் என கொளுத்தி போட்ட ரஜினி
- இயக்குனர்களை செல்லாக்காசாக்கிய ரஜினி