சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஒரு வழியா சூர்யா 44 ரிலீஸ் தேதி முடிவு பண்ணியாச்சு.. அப்ப கங்குவா? அது அவ்ளோதான்

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள சூர்யா44 படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூட்டணி என்றால் அது சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிதான். அந்தளவுக்கு இருவரும் தங்களின் கேரியரில் முக்கியமான படங்கள் கொடுத்து, ஆடியன்ஸை தங்கள் பக்கம் வைத்துள்ளனர்.

இருவரும் இணைந்துள்ள ‘சூர்யா44 ‘ படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கேங்ஸ்டர் திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் உள்ள கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுவென நடந்துவரும் நிலையில், இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நடிகர் சூர்யாவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் ‘கங்குவா’ படம் ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில், இப்படத்தை தீபாவளிக்கா, அல்லது டிசம்பரில் வெளியிடுவதா? அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாமா ? என்று படக்குழு யோசித்தபோது, ‘சூர்யா 44 படம் பொங்கலுக்கு வரும் என்று தீர்மானித்து, நவம்பர் 14 ஆம் தேதி கங்குவாவை ரிலீஸ் செய்ய முடிவானதாக தகவல் வெளியாகிறது.

இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த வித்தியாசமான 2 படங்களைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதேசமயம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருந்தால்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படங்கள் இரண்டு கல்லா கட்டி வசூல் குவிக்கும் என்று கூறப்படுகிறது.

சூரரைப் போற்று படத்திற்குப் பின் சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகவில்லை. அதனால் இவ்விரு படங்களையும் ரசிகர்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்துள்ளனர். கங்குவா பட டிரெயிலரே மிரட்டலாக இருந்த நிலையில், நிச்சயம் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் இப்படம் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News