ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் திடீரென்று தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் இதைச் சற்றும் எதிர்பார்க்காத வாடிக்கையாளர்கள், இத்தனை நாள் அது இருக்கட்டும் என்று கருதி வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தங்கள் நெட்வொர்க்கை வாலிண்டியராக மாற்றி வருகின்றனர்.
என்னதான் இருந்தாலும் தனியார் நிறுவனங்களின் மொபைல் நெட்வொர்க்கிற்கு சமமாக பிஎஸ்என்எல் வருமா என்றெல்லாம் பேசிய மக்கள் அந்தக் கருத்தில் இருந்து மாறிவருகின்றனர். குறிப்பாக ஏர்டெல், வோடபோன், ஏர்செல்,எம்டிஎஸ், டாடா டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் கோலோட்சிக் கொண்டிருந்த காலத்திலேயே, பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருந்தது என்றாலும் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் சேவைகள் பற்றி வாடிக்கையாளர்கள் கருத்துகள் கூறி வந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை இப்போதும் வழக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தி வருவதான் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது.கடந்த ஜூலை மாதம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.
முதலில் ஜியோ கட்டணத்தை உயர்த்திய பிறகே மற்ற நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தன. அதன்படி, இந்நிறுவனங்கள் 10 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அடுத்து, என்ன செய்வது என்று யோசித்து வருகின்றனர். அதில், இன்னும் சிலர், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு தங்கள் இணைப்பை மாற்றி வருகின்றனர். இதனால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்கள் பல வருட வாடிக்கையாளர்களை இக்கட்டண உயர்வால் இழந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய டிராய் அமைப்பு மாதம்தோறும் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் பற்றி அறிவிப்பு வெளியிடும். சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், வோடபோன் ஐடியா நிறுவனம் 14.1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் ஜியோ நிறுவனம் 7.58 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ஜுலையில் மட்டும் 29 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் ஜி சேவையை தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பெற முடியும், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இது பெரும் பயனைத்தரும் என்று கூறப்படுகிறது. அரசும் தனியார் நிறுவனங்களின் அப்டேட்டை போல மாறி வரும் காலத்திற்கேற்ப புதிய அப்டேட்டுகளை பிஎஸ்என்எல்-ல் கொடுத்து தொழில்நுட்பத்தையும், நெட்வொர்க்கும் எல்லா இடங்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் செய்தால் தனியாருக்கே பிஎஸ்என்எல் டஃப் கொடுக்கும் என்று பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.