சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தளபதிக்கு உருவாக்கிய கதையில் சூர்யா! சிவகார்த்திகேயனை மண்டையில் கொட்டு வைக்கும் காமெடி இயக்குனர்!

நடிகர் திலகம் சிவாஜி, கமல்ஹாசன், விக்கிரமுக்குப் பிறகு வித்தியாசமான கெட்டப்புகளுடன் தன்னை வருத்தி நடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. சிவக்குமாரின் மகனாக இருந்தாலும் அவரும் வெற்றியை ருசிக்க சில வருடங்கள் காத்திருக்க வேண்டிருந்தது.

தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும், விளையாட்டுத்துறையிலும் கால்பதித்துள்ளார். ‘சூரரைப் போற்று’ என்ற படத்தின் மூலம் நடிகர்களின் கனவான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்ற சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு குவிந்து வருகிறது.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் டிராப் ஆனது. தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

எப்போதும் வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து அதில் தன் நடிப்பு திறனைக் காட்டி வருகிற சூர்யா அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வி கோலிவுட்டை சுற்றி வந்தது. ரசிகர்களும் இதை கேட்டு வந்தனர். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுவரை ஆர்.ஜே. பாலாஜி எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விஷேசம் ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில், இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சூர்யாவின் 45 வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகவும், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படத்திற்கு முன்பு இப்படத்தை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் எனவும் 100 கோடி ரூபாய்க்கு மேல் இப்படத்திற்கு பட்ஜெட் திட்டமிட்டிருப்பதாலும் இதுவரை யாரும் நினைக்காத ஆர்.ஜே.பாலாஜி- சூர்யா காம்போவில் உருவாகவிருக்கும் இப்படம் எந்த ஜர்னரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கூடுதல் தகவலாக தளபதி விஜயிடம் இக்கதையை ஆர்.ஜே. பாலாஜி கூறியதாகவும் ஆனால், எதோ சில காரணங்களால் இப்படத்தில் அவர் நடிக்கவில்லை; எனவே சூர்யாவை அணுகி ஆர்.ஜே.பாலாஜி கதையை கூறவே பிடித்துப் போனதால் விரைவில் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும், இக்கதை அரசியல் களத்தை மையப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகின்றன.

சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் நடிகர் விஜய்யிடம் நீங்கள் போங்க சார் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்…இதைய நான் பார்த்திருக்கிறேன் என்று கூறுவது அவர் தான் விஜய்யின் இடத்தைப் பிடித்துவிட்டார் என்று என்று பலரும் கூறிய நிலையில், தளபதிக்கு உருவாக்கிய கதையில், சூர்யா நடிப்பவிருப்பதால் தளபதி இடத்தை சூர்யாதான் பிடித்திருக்கிறார். அதற்கான கதையைத்தான் ஆர்.ஜே.பாலாஜி உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Trending News