திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

திருப்பதி லட்டு போய் பழனி பஞ்சாமிர்தமா.? திரௌபதி பட இயக்குனர் கைது, முழு விவரம்

Director Mohan G: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் திருப்பதி லட்டு விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு கொடுக்கும் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக வெளிவந்த செய்தி இப்போது வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இதனால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாக சில பரிகார பூஜைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பழனி பஞ்சாமிர்தம் அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளது. இதன் காரணமாக திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்னவென்றால் இவர் ஒரு பேட்டியில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். மேலும் இது செவி வழியாக கேட்ட தகவல் தான். அங்கு வேலை பார்த்தவர்கள் இது குறித்து சொன்னார்கள்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய மோகன் ஜி

அது பிரச்சினையாக மாறிய நிலையில் அந்த செய்தியை வெளிவராமல் தடுத்து பஞ்சாமிர்தத்தையும் அழித்து விட்டனர். இது எதுவும் பொதுமக்களுக்கு தெரியாது என குறிப்பிட்டு இருந்தார். அந்த விவகாரம் தான் தற்போது இவருடைய கைதுக்கு காரணமாக உள்ளது.

தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது அவருடைய குடும்பத்தாருக்கு தெரியவில்லையாம். இது நிச்சயம் சட்டத்திற்கு புறம்பானது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது மோகன் ஜி எந்த வழக்கு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. ஆனால் அவரை சென்னையில் கைது செய்த போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இதன் முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை இயக்குனரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

Trending News