மகனை ஹீரோவாக்கி வசூலை பார்க்க போகும் விஜய்யின் தயாரிப்பாளர்.. கௌதம் மேனனுக்கு வைத்த செக்

கதை எப்படி இருந்தாலும் முன்னணி ஹீரோக்களை வைத்து தயாரித்தால் அந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்படாது என்று பல தயாரிப்பாளர்கள் துணிந்து இறங்குவார்கள். அதிலும் விஜய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை நீ நான் என போட்டி போட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பார்கள். அப்படித்தான் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் இரண்டு படங்கள் மூலம் வசூலை அள்ளிவிட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்துவரும் எல்ஐசி படத்தை தயாரித்து வருகிறார். ஆனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை. அத்துடன் விஜயும் அரசியலை நோக்கி பயணிப்பதால் இனி அவரை நம்புவது பிரயோஜனம் இல்லை என்று மற்ற ஹீரோக்களையும் நாடிப் போகிறார்.

நோ சொல்லி திருப்பி அனுப்பிய கௌதம் மேனன்

அந்த வகையில் தனுஷை வைத்து தயாரிக்கலாம் என்று அவருக்கு அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால் தனுஷ் தற்போது இயக்குனராகவும் நடிகராகவும் பிசியாக இருப்பதால் இவருக்கு கொஞ்சம் டைம் கேட்டு தள்ளி வைத்திருக்கிறார். இதற்கிடையில் வேறு ஒரு ஹீரோவை நம்பி போக வேண்டாம் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் லலித், திடீரென்று மகனை ஹீரோவாக்கி தயாரிக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

ஆனால் மகன் ஹீரோவாக நடிக்கப் போகும் படத்தை பெரிய இயக்குனரை வைத்து பண்ணலாம் என்று நினைத்து கௌதம் மேனன் இடம் போயிருக்கிறார். அவரும் சம்மதித்த நிலையில் கவுதமுக்கு சம்பளமாக 5 கோடியும், படத்தின் பட்ஜெட்டுக்காக 15 கோடி வரையும் செலவு செய்யலாம் என்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அங்கேதான் தயாரிப்பாளர், கௌதமுக்கு ஒரு செக் வைத்திருக்கிறார்.

அதாவது நான் உங்களுக்கு சம்பளமாக தரக்கூடிய 5 கோடி பணத்தை படத்தை முடித்த பிறகு தான் தருவேன் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் கௌதம் ஏற்கனவே ஏகப்பட்ட கடன்களில் இருப்பதால் படம் பண்ணிய பிறகு ரிலீஸ் பண்ணும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அப்பொழுது அந்த பணத்தை வைத்து சரி கட்டலாம் என்று தயாரிப்பாளர் லலித் யோசித்து இருக்கிறார்.

ஆனால் இதற்கு கௌதம் சம்மதம் கொடுக்காமல் நோ சொல்லிவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக இயக்குனர் லிங்குசாமியிடம் பேச்சுவார்த்தை செய்திருக்கிறார். ஆனால் லிங்குசாமியின் ட்ராக் தற்போது மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற கதையை நோக்கி போவதால் லலித் மகனுக்கு செட்டாகாது என்று விலகிவிட்டார். அடுத்ததாக தயாரிப்பாளர் லலித் எடுத்த முடிவு என்னவென்றால் புதுமுக இயக்குனர்கள் யாரையாவது வைத்து மகனை நடிக்க வைக்கலாம்.

குறைந்த செலவில் அதிக வசூலை அடைந்த படங்களான லவ் டுடே, லப்பர் பந்து போன்ற படங்கள் மாதிரி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அந்த வகையில் எப்படியாவது தன் மகனை வைத்து வசூலையும் அல்ல வேண்டும், இன்னொரு பக்கம் மகனையும் ஒரு நடிகராக ஆக்கிவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் லலித் முடிவெடுத்து விட்டார்.

அந்த வகையில் மகனை ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட 50 கோடி பணத்தை ஒதுக்கி வைத்து நல்ல இயக்குனருக்காக காத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இதை தான் கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிச்சிடனும் என்று சொல்வார்கள். ஹீரோக்கள் கிடைக்காத பட்சத்தில் தன் மகனையே ஹீரோவாக்கி லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் லலித் முடிவு பண்ணிவிட்டார்.

Trending News

- Advertisement -spot_img