சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார்.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட், ஆர்த்தி ரொம்ப டேஞ்சரான ஆள் போலையே

ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தபோது முதலில் ஆர்த்தி மீதுதான் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் ஆர்த்தி விளக்கமளித்த பிறகு அந்தக் குற்றச்சாட்டுக்கள் அப்படியே ரவி பக்கம் திரும்பின. மேலும் கெனிஷா என்ற பெண்ணுடன் ரவிக்கு ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என்றும் சொன்னார்கள்.

மேலும் சமீபத்தில் கூட, உண்மையில் ஆர்த்தி இந்த விவாகரத்து வேண்டாம் என்று நினைத்திருந்தால், அவர் இந்நேரம் என்னிடம் வந்து பேசிருப்பார். ஏன் அவர் பேசவில்லை..ஏன் அவர் நான் கொடுத்த லீகல் நோட்டீஸ் க்கு பதிலளிக்கவில்லை.. சமாதானமாக போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் “என்கிட்ட இப்போ எதுவுமே இல்ல.. என்னால அந்த வீட்டுல இருக்க முடியல.. மூச்சு முட்டுது.. அதனால் தான் நான் கிளம்பிட்டேன். என்கிட்டே இப்போ ஒரு கார் மட்டும் தான் இருக்கு.. நான் ஒரு நாடோடி மாதிரி” என்று சொல்லி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு இன்னும் பெரிய ஷாக் தான் கொடுத்திருக்கிறது.

ஒரு படத்தில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் மனிதனுக்கு இப்படி ஒரு நிலைமையா? எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது என்று இதை பார்த்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் என் குழந்தைகளுக்கு கஸ்டடி வேண்டும் என்றும் நடிகர் ஜெயம் ரவி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் குழந்தைகள் தான் பாவம் என்றும் சொல்லி வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. , சில தினங்களுக்கு முன்பு, தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றி விட்டதாக கூறி ஜெயம் ரவி போலீஸில் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் ஆர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறது.

சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு ஜெயம் ரவி அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News