சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அப்பாவை போல் குடிகாரனாக மாறிய பாக்யாவின் வாரிசு.. அட்வைஸ் பண்ணும் கோபி, ஆட்டம் ஆடும் இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காலேஜில் நடக்க போகும் டான்ஸ் போட்டியில் ஜெயித்து குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வீட்டிற்கு வந்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுகிறார். இது எதுவும் தெரியாத ஈஸ்வரி, மாடியில் என்ன சத்தம் கேட்கிறது என்று ஜெனியிடம் கேட்கிறார். ஜெனி, இனியா தான் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்.

பிறகு கீழே வந்த இனியா நான் ஆடவில்லை என்று சொல்லி சமாளித்து மறுபடியும் மேலே போய் பிராக்டிஸ் பண்ணுகிறார். அந்த நேரத்தில் பாக்யா வந்ததும் பாக்யாவிடம் உண்மை எதையும் சொல்லாமல் சமாளித்து விடுகிறார். வழக்கம் போல் பாக்கிய, இனியாவை நம்பி போய் விடுகிறார். இதனை தொடர்ந்து கோபி மற்றும் அவருடைய நண்பர் இருவரும் சேர்ந்து வழக்கமாக குடிக்கிற இடத்துக்கு போகிறார்கள்.

கோபியின் இடத்தை பிடித்த பாக்யாவின் வாரிசு

ஆனால் அங்கே போனதும் நான் இனி குடிக்க போவதில்லை என்று கோபி செல்கிறார். இதை கேட்டதும் நண்பர் ஏன் என்னாச்சு என்று கேட்ட நிலையில் எனக்குன்னு இருக்கிற உறவு குடும்பம் ராதிகா மயூ தான். அதனால் நான் குடிப்பது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தெரிந்த பிறகும் நான் இனி அதை கையால் கூட தொட மாட்டேன்.

ராதிகாவிற்கு என்னால் முடிந்த சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் இனி குடிக்க மாட்டேன் என்று முடிவு பண்ணிட்டேன் என்று கூறுகிறார். பிறகு கோபி நண்பர் மது அருந்திவிட்டு கோபி வெறும் கூல்ட்ரிங்ஸ் மட்டும் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். அப்படி போகும் போது எதிர்ச்சியாக அங்கே செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார்.

பிறகு கோபி, செழியன் இடம் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு செழியன் ஆபீஸில் ஒரு பிரச்சனை என்று ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது எனக்கு பயமா இருக்கிறது. என்னையும் வேலை விட்டு தூக்கி விட்டால் நான் எப்படி குடும்பத்தையும் ஜெனியையும் பார்த்துக் கொள்வேன் என்ற பயம் வந்துவிட்டது என்று புலம்புகிறார்.

உடனே கோபி, இதெல்லாம் நினைச்சு நீ கவலைப்படாதே. இந்த வேலை இல்லன்னா என்ன எத்தனையோ வேலை இருக்கிறது. பார்த்துக்கிடலாம் நீ அதை நினைத்து உன் உடம்பை கெடுத்துக்காத என்று அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் இதுவரை தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு போன கோபி, தற்போது அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு குடிபோதையில் செழியன் குடித்து விட்டார்.

பிறகு இப்படியே விட முடியாது என்பதற்காக கோபி, செழியனை காரில் கூட்டிட்டு போய் பாக்யா வீட்டில் டிராப் பண்ணுகிறார். மறுபடியும் மகனுக்கு அட்வைஸ் பண்ணி ஆறுதல் சொல்லி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பாக்யா பார்த்து விடுகிறார். இருந்தாலும் செழியன் இந்த சூழ்நிலையில் இருப்பதை பார்த்தால் ஜெனிக்கும் செழியனுக்கும் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே பாக்யா ஹோட்டலை அபகரித்துவிட்டு ஒன்றும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்று கோபி சூழ்ச்சி பண்ணி விட்டார். இந்த நேரத்தில் செழியனுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டால் பணரீதியாக ஒட்டுமொத்த குடும்பமும் பிரச்சினையில் தவிக்க போகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News