சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அடிச்சு தூக்கு.. அஜித்தை வளைத்து போட்ட பான் இந்தியா இயக்குநர்.. அப்போ அசால்ட்டா ரூ.1000 கோடி வசூல்!

சினிமாவில் தன் முயற்சியில் நடிக்க வந்து விடாமுயற்சியுடன் இளைஞர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரைப் பற்றி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பேசிக் கொண்டே இருக்கிறார். அவரது செய்திகளையும், புதுப்படங்களையும் பற்றி பதிவிட்டு டிரெண்டிங் செய்து கொண்டே இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார் அஜித்குமார். சினிமாவில் பலரும் படங்கள் நடித்து முடித்துவிட்டு, அது குறித்து ஓவர் ஹைப் ஏற்ற யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுவதும், புரளி பேசுவதும், போட்டி பொறாமைகளில் ஈடுபடுவதுமாக இருப்பதாக தகவல் வெளியாக, அஜித் மட்டும் எந்த அலட்டலும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்.

ஆனாலும், தான் நடித்த படங்களுக்கே அவர் புரமோசன் பணிகளுக்கு வருவதில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தன் ஆர்வத்தை பைக் பயணம், புதிய கார் வாங்குவதல், கார் ரேசில் பங்கேற்பது, நண்பர்களுடன் டூர் செல்லுதல், ட்ரோன் தயாரித்தல், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றல் உள்ளிட்டவற்றில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார் என்று அவரைப் பாராட்டியும் வருகின்றனர்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி, சூர்யாவின் கங்குவா படத்திற்குப் போட்டியாக ரிலீசாகவுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து அஜித்தின் படம் ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் அப்பத்தைக் கொண்டாட ரெடியாக வருகின்றனர். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்பட த்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கன்னட சினிமாவில் இருந்து கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்தியா இயக்குனராக அறியப்படும் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பத்தை பிரமாண்ட படத் தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே கேஜிஎஃப்-1 மற்றும் கேஜிஎஃப் 2 , ஆர்.ஆர்.ஆர், ரிசப் ஷெட்டியின் காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள நிலையில் அஜித்குமார் பிரசாந்த் நீல் இணையும் படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அஜித்திற்கு புராஃபிட் ஷேர் கொடுப்பதாக தெரிகிறது.

பிரசாந்த் நீல் அஜித்திற்கு கூறிய கதையின் நாட் பிடித்துப் போயுள்ளதால் இப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ் இயக்குனர்களின் படங்களில் கவனம் செலுத்தி வந்த அஜித், பான் இந்திய இயக்குனரின் படங்களிலும் வித்தியாசமான கதையுள்ள படங்களில் நடிக்க ஆர்வாம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தற்போது பிரசாந்த் நீல்- ஜுனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து பணியாற்றி வரும் புதிய புராஜக்ட் நிறைவடைந்த பின், அஜித்குமாருடன் அடுத்த படத்தில் பிரசாந்த் நீல் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், இதற்கு ஹம்பாலே நிறுவனம் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்புதிய படத்தின் மூலம் அஜித்தும் பான் இந்தியா ஸ்டாராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News