Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜியின் அப்பா அமைதியாக இருந்தாலும் சித்தப்பா ரொம்பவே ஓவராக துள்ளிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது ராஜி மற்றும் கோமதியை அவமானப்படுத்தி பேசி முத்துவேலுவின் கோபத்தை அதிகரித்து மொத்த சொத்தையும் ஆட்டைய போட வேண்டும் என்ற தந்திரத்தில் சக்திவேல் செயல்பட்டு வருகிறார்.
இது எதுவும் தெரியாத முத்துவேலும் தம்பி என்ன சொன்னாலும் சரி என்று மண்டையை ஆட்டிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கோமதி மற்றும் ராஜியை ஓடிப் போய் கல்யாணம் பண்ணி குடும்பத்திற்கு அவமானத்தை கொடுத்தவர்கள் என்று சக்திவேல் திட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த பாண்டியன் கோபப்பட்டு நிலையில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.
அண்ணனின் கோபத்தை தூண்டிவிடும் சக்திவேல்
ஆனாலும் இதுக்கு அப்புறம் சும்மா இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப ராஜி பொங்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் எதற்கெடுத்தாலும் எங்களை குறை சொல்வதை விட்டு, உங்க பிள்ளையை பொறுப்பா ஒழுங்கா வளர்த்திருக்கீங்களா என்று பாருங்கள் என்று சொல்கிறார். அதற்கு சக்திவேல் என் மகனுக்கு என்ன அவன்தான் இந்த குடும்பத்தை கட்டிக் காக்கும் ஆண் சிங்கம் என்று பெருமை பேசுகிறார்.
அப்பொழுது அந்த ஆண் சிங்கம் என்ன பண்ணுச்சு என்று தெரியுமா? சரவணன் மாமா கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக என்னையும் மீனா அக்காவையும் கடத்தி வைத்தார் என்ற உண்மையை ராஜி போட்டு உடைக்கிறார். உடனே சக்திவேல் மொத்த பழியையும் பாண்டியன் மீது போடும் வகையில் மறுபடியும் அவமானப்படுத்தி பேசினார்.
ஆனால் ராஜி நான் சொல்வது அத்தனையும் உண்மை. வேண்டுமென்றால் மீனா அக்காவிடம் கேளுங்கள் என்று மீனாவை கோர்த்து விடுகிறார். உடனே மீனா, ராஜி சொல்வது எல்லாம் உண்மைதான் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் கோபப்பட்டு குமரவேலுவை அனைவருக்கும் முன்னாடி அடித்து துவைக்கிறார். இதனை பார்த்த பெண் வீட்டார்கள் இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என்று தலைதரித்து ஓடி விடுகிறார்கள்.
பிறகு வீட்டுக்குள் போனதும் பாண்டியன் இவ்வளவு நடந்த விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று மீனா மற்றும் ராஜிடம் கேட்கிறார். அதற்கு மீனா எங்க இரண்டு பேருடைய கல்யாணம்தான் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போய்விட்டது. சரவணன் மாமா கல்யாணம் ஆவது எந்த பிரச்சினையும் நடக்காமல் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உண்மையை மறைத்து விட்டோம் என்று மீனா சொல்கிறார்.
அதன் பிறகு தான் பாண்டியன் கொஞ்சம் அமைதியாகி இந்த பிரச்சினையை முடித்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த கோபத்தையும் குமரவேலு, பாண்டியன் மீது காட்டும் விதமாக மகள் அரசியை திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணப் போகிறார். இவங்க பஞ்சாயத்தில் தேவையில்லாமல் அரசின் வாழ்க்கை கேள்விக்குறியாக போகப் போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவம்
- Pandian Stores 2: கதிருக்காக ஆக்ரோஷமாக களமிறங்கிய ராஜி
- Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்
- சரவணனுக்காக சகித்துக் கொள்ளும் குடும்பம்