திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

‘லப்பர் பந்தில்’ சிக்ஸர் அடித்த அட்டகத்தி தினேஷ்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்

தனக்கென ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த எத்தனையோ நடிகர்களில் ஒருவர் அட்டகத்தி தினேஷ். இவர் ஹரீஸ் கல்யாணுடன் இணைந்து நடித்த லப்பர் பந்து சமீபத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நிலையில் அட்டகத்தி தினேஷ் தன் அடுத்த படங்கள் என்னென்ன என்று கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா – நயன்தாரா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈ’. இப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் தினேஷ். அதன்பின், தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் மெளனகுரு என்ற சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சினிமாவில் ஹீரோ வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு, பா.ரஞ்சித் தன் முதல்படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில், தினேஷ் ஹீரோவாக அறிமுகமான படம் ‘அட்டகத்தி’. இப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், ‘குக்கூ’ என்ற படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி இளைஞராக நடித்து ரசிகர்களை உருகவைத்தார். அதன்பின்னர், கபாலி, உள்குத்து, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான நடிப்பில் இன்று அனைவரும் வியக்கும்படி வளந்திருக்கிறார்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரீஸ் கல்யாண் காளி வெங்கட், பாலா சரவணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸான படம் ‘லப்பர் பந்து’. கிராமத்து வாழ்வியல் மற்றும் அங்குள்ள இளைஞர்களின் கிரிக்கெட் போட்டி, காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, ரசிகர்களாலும் சினிமாத்துறையினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகி 6 நாட்களில் ரூ.9.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. லப்பர் படத்தின் ஹிட்டை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் உற்சாகமடைந்துள்ளார். எனவே பல முன்னணி ஊடகங்கள் அட்டகத்தி தினேஷை பேட்டியெடுத்து வருகின்றன.

அப்போது அடுத்து என்ன மாதிரியான படங்களில் நீங்கள் நடித்து வருகிறீர்கள் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அட்டகத்தி தினேஷ் கூறியதாவது: ”எனது அடுத்த படம் ‘தண்டகாரண்யம்’ ரீலீஸாகவுள்ளது. தொடர்ந்து எம்.எம்.எஸ் ராஜேஷின் உதவியாளர் முரளி கிருஷ்ணனின் படத்தில் நடிக்கிறேன். அதன்பின் ‘வாராயோ வெண்ணிலாவே’. இப்படத்தை மிகவும் விரும்புகிறேன்.

ஏனென்றால் இப்படத்தில் இளையராஜா சார் பாடியுள்ளார். யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார், கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சசிதரண் இயக்கியுள்ளார். மேலும் நான் இவர்களுடன் எல்லாம் நெருங்கிப் பழகிவிட்டதால், அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற படங்கள் எப்படிப் போகும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அதேபோல், பா.ரஞ்சித்தின் கேங்டர் புராஜக்ட் உள்ளது. அதன் டைட்டில் வெட்டுவம் வெயிட்டிங்கில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தனக்குக் கிடைத்த கேரக்டர்களை சினிமாவில் நடிப்பின் மூலமாக ரசிகர்களின் கண்முன் தத்ரூபமாக கண்முன் நிறுத்திய தினேஷ், இனி வரும் படங்களிலும் தன்னை நிரூபித்து, விரைவில் முன்னணி நடிகராக வேண்டும் என அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News