திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

நண்பா என்ன மறந்துட்டியா.! இறந்து போனதுக்கு அப்புறம் பொங்கிய இளையராஜாவின் பாசம்

திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டி நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுவரையில் திரையில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள, எஸ் பி பீ, இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தது.

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கிய எஸ் பி பீ ஒளி இன்றளவும் நம் காதுகளில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர் வாழ்ந்த தெருவுக்கு, அவர் பெயர் சூட்டினார். இந்த அறிவிப்புக்கு இயக்குனர் பாரதி ராஜா உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பரான இளையராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஆச்சரியம். “கல்லுக்குள் ஈரம் ங்குற மாதிரி இல்ல இருக்கு. என்ன ஒரு ஆச்சரியம், தனது, டாம்பீகத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து பேசுகிறாரே, பரவா இல்ல. இதே நட்போடு, அவர் உயிருடன் இருந்தபோதும், இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.” என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள.

Trending News