சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தனுஷ் படத்திலிருந்து விலகிய அசோக் செல்வன்.. இதுதான் காரணம்

Dhanush : அசோக் செல்வன் சமீபகாலமாக கதாநாயகனாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் நல்ல வரவேற்பு இருக்கிறது. சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்த போர் தொழில் படம் பெரிய வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் அசோக் செல்வன் ஒப்பந்தமாகி இருந்தார்.

ராயன் படத்தை தனுஷ் இயக்கி, நடித்து வெற்றி கண்டிருந்தார். இதைத்தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வந்தனர்.

இதில் அசோக் செல்வனுக்கும் ஒரு கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்திருந்தார். ஆரம்பத்தில் தனுஷ் படம் என்பதால் கதையை கேட்காமல் அசோக் செல்வன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம். ஆனால் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாதது தெரியவந்துள்ளது.

தனுஷ் படத்திலிருந்து விலகும் அசோக் செல்வன்

இப்போதுதான் அசோக் செல்வன் தட்டு தடுமாறி ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்று நல்ல கதை உள்ள படங்களை கொடுத்து வருகிறார். கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் அசோக் செல்வனுக்கு வந்தாலும் தனுஷ் கூப்பிட்டதற்காக இட்லி கடை படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்காது என்று தெரிந்தவுடன் இதிலிருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். தனுஷ் இதனால் அசோக் செல்வனின் கதாபாத்திரத்தை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இல்லையென்றால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் இட்லி கடை படப்பிடிப்பு இப்போது தேனியில் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் இப்படத்திற்கான அப்டேட்டுகளை விரைவில் கொடுக்க உள்ளார்.

சினிமாவில் வளர்ந்த வரும் அசோக் செல்வன்

Trending News