படிக்காதவன் பட ரஜினி தம்பி விஜய்பாபுவின் தற்போதைய நிலை? அவர் மகன் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

படிக்காதவன் படத்தில் சொந்த அண்ணனுக்கு, பணத்துக்காக துரோகம் செய்ய கூடிய தம்பியை நினைவிருக்கா? நல்ல சுருட்டை முடியோடு, அண்ணே அண்ணே என்று கூப்பிட்டே குழிபறிப்பாரே.. அவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் ‘படிக்காதவன்’. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ‘படிக்காதவன்’ படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் தான் விஜய் பாபு. விஜய் பாபு ‘ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

இந்த படத்தினை தொடர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, குமரிப் பெண்ணின் உள்ளத்தில், ருசி கண்ட பூனை, எங்கம்மா மகாராணி, கசப்பும் இனிப்பும், படிக்காதவன்’போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் படிக்காதவன் படத்தை தவிர, வேறு எந்த படமும் அவருக்கென்று ஒரு அடையாளத்தை வாங்கி தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தவர், தனுஷ் நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ படத்தில் நடித்தார். விஜய் பாபு கடைசியாக விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களில், இவர் தான் நடித்திருக்கிறார் என்றே நாம் கவனித்திருக்க மாட்டோம். இவர் சினிமாவில், பெருமளவில் சாதிக்காவிட்டாலும், தொழிலதிபராக ஒரு முக்கிய நபராகவே இருக்கிறார்.

‘படிக்காதவன்’ படத்தில் சிவாஜி மற்றும் ரஜினி உடன் நடித்த விஜய் பாபுக்கு தற்பொழுது 72 வயதாகும் நிலையில் அதே எனர்ஜியுடன் இருந்து வருகிறார். விஜய் பாபு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச் ஹவுஸ் ஒன்றையும் கட்டி சமீபத்தில் அந்த வீட்டுக்கு குடிபுகுந்துள்ளார். இவர் மகன் கூட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மீகாமன், கைதி, லத்தி, சளார் போன்ற படங்களில் இவருடைய மகன் நடித்துள்ளார். ஆம் பிரபல நடிகர் ரமணா இவர் மகன்தான். நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரமணா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஒருபக்கம் தொழில், மறுபக்கம் சினிமா என்று பிசியாக இருக்கும் குடும்பங்களில் இவர்களும் ஒருவர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment