தமிழ், தெலுங்கு மொழி திரைப்படத்தில் தன்னுடைய வித்யாசமான நடன அசைவுகள் மூலம் மக்கள் கவனத்தை பெற்றவர் ஜானி மாஸ்டர். இவரின் நடனத்தை பாராட்டி இந்திய அரசு அவருக்கு தேசிய விருதையும் வழங்கியது. இந்த நிலையில் தான் பெண் ஒருவர் அளித்த புகார் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்ற ஹைதராபாத் போலீசார், தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த புகாரை தொடர்ந்து, நடன இயக்குனர்கள் சங்கம், ஜன சேனா கட்சியில் இருந்து, இவரை வெளியேற்றினார்கள். அது மேலும் இவர் மீது இருக்கும் சந்தேகத்தை உறுதி படுத்தியது. மேலும் நான்கு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அடிப்படை ஆதரமற்றது எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கில் வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில், இந்த விவகாரம் குறித்து ஜானி மாஸ்டர் தெரிவித்த கருத்துகள் வெளியானது. அதில், “என்னால் பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன். ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.”
“புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது, அந்தப் பெண் என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் , மனதளவில் வேதனையடைந்த நான், புஷ்பா பட இயக்குநர் சுகுமாறிடம் கூறினேன். இந்த விஷயத்தில் அவரும் எனக்கு உதவி செய்தார். அந்தப் பெண்ணிடம் சுகுமாரும் பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால், அந்தப் பெண் அவற்றை எல்லாம் ஏற்பதாகவே தெரியவில்லை. தன் முடிவில் உறுதியாகவே இருந்தார். அதற்கு நான் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இனி புஷ்பா பட இயக்குனரிடமும், விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.. “நான் பாட்டுக்கு சிவனேனு தானே டா இருந்தேன் ” என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார் புஷ்பா பட இயக்குனர்.