சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சுயநலவாதியாக மாறிவிட்டாரா அஜித்? தொழில் பத்தி இல்ல.. பிஸ்மியின் வலைப்பேச்சால் அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

Ajithkumar: பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் அஜித்குமார் சினிமாவில் தன்னை வைத்து முதல் போட்டு, பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளார்.

அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று யாராலும் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார் அஜித்குமார். அவர் யார் வம்புக்கும் போவதில்லை. யார் பற்றியும் அவதூறு பரப்புவதில்லை’ அவர் வேலையை அவர் செய்து வந்தாலும் அவர் மீது எல்லோருக்கும் ஒரு கண் உள்ளதுபோல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக அஜித்தின் பெரும்பாலான படங்கள் தோல்விப் படங்கள் அவரால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் என்றெல்லாம் பேச்சு எழுந்தன. இதுகுறித்து ஒரு தொகுப்பாளர் கேட்டதற்கு, அஜித் பதில் அளித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்த நிலையில், சினிமாவில் விஜய் மற்றும் அஜித் போட்டியாளர்கள் என்று கூறப்பட்டாலும் விஜய்யின் படங்கள் குறிப்பிட்ட தேதியில் ஷூட்டிங் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகிறது.

அதற்கு விஜய் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒத்துழைப்புக் கொடுப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அஜித்திற்கு துணிவுக்குப் பிறகு எந்த படமும் ரிலீசாகவில்லை. விடாமுயற்சி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுகுறித்த அப்டேட்டும் பெரிதாக வெளியாகாததால், ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதற்கு அப்படம் வெளியீட்டில் முழுவதுமாக அஜித் பெரிதாக ஆர்வம் காட்டாமல், தான் நடிப்பதும், இடையில் பைக் ரேஸ், கார் ரேஸ் என்று செல்வதுதான் காரணமா? என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

இப்போது மட்டுமல்ல, ‘அசல்’ படத்தில் இருந்தே அஜித் ரேஸுக்கு செல்வதாக தகவல் வெளியானபோது, அவர் நடிக்கும் முதல் போட்ட தயாரிப்பாளர்கள் டென்சனாகி அவர் முடிவை மாற்றியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகிழ்திருமேனியின் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என்று இரண்டு படங்களில் பிசிஸாக இருக்கும் அஜித் மீண்டும், கார் ரேஸுக்கு செல்வதாகவும் புதிய கார் ரேஸிங் அணியை துவங்கியதாகவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்தார்.

இதனால் அஜித் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? இல்லை ரேஸிங்கிற்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித்திற்கு நினைத்த போது, நினைத்த மாத்திரத்தில் பல கோடி மதிப்பில் கார், பைக் உலகச் சுற்றுப்பயணம் செய்ய இதற்கெல்லாம் செலவாகும் பணம் சினிமாவில் படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்குப் பல கோடி சம்பளம் கிடைக்கிறது என்பதால் சினிமாவைவிட்டு அவர் விலக மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடிப்பதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சினிமாவில் நடிகர் அஜித்தின் சின்சியாரிட்டி குறைஞ்சிருச்சு. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். கார் ரேஸ், பைக் ரேஸிங் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அவர் படங்களுக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களை அவர் நினைக்க வேண்டும்.

ஒரு படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ.150 முதல் ரூ. 200 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கப்படும் நிலையில், விடாமுயற்சி படம் தொடங்கி ரிலீஸ் தாமதாகிவருகிறது. இதைப் பற்றியும், தயாரிப்பாளர்கள் பணம் போட்டு கஷ்டப்பட்டு படம் எடுப்பதை பற்றியும் அஜித் நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பைக் ரேஸுக்கு செல்லலாமா? இப்படம் ரிலீஸ் தள்ளிப் போகாமல் இருந்தால் லைகாவுக்கு நஷ்டமிருந்திருக்காது’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘விடாமுயற்சி பட ரிலீஸ் தாமதமாவதற்கு அஜித்தை மட்டும் ஏன் விமர்சிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ‘அஜித் ஷீட்டிங்கின் போது ரேஸிங்கிற்கும் பைக் டிராவலுக்கும் செல்வதில்லை. அவர் ஓய்வின்போது தான், ஷூட்டிங் இடையில்தான் செல்கிறார்’ என்று கூறிவருகின்றனர்.


Trending News