GOAT : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் தான் கோட். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. ஆரம்பத்தில் இப்படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூலும் ஓரளவு நன்றாக இருந்து வந்தது.
கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் 380 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 250 கோடி என்று கூறப்பட்டது. இந்த சூழலில் முதல் நாளே கிட்டத்தட்ட 126 கோடி வசூலை கோட் படம் அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதோடு இரண்டு வாரங்கள் வேறு எந்த படமும் தமிழில் வெளியாகாததால் கோட் படம் வசூல் வேட்டையாடி வந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து, கார்த்தியின் மெய்யழகன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோட் படம் 25 நாட்களில் செய்த கலெக்ஷன்
புது படங்களின் வரவால் கோட் படத்தின் வசூல் குறைந்து இருக்கிறது. ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் 25 நாட்களில் கிட்டத்தட்ட 460 கோடி வசூலை கோட் படம் பெற்று இருக்கிறது. விஜய்யின் படம் 500 கோடி வசூலை தொடாதது அவரது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படம் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்க உள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் ஓடிடிக்கு வர வாய்ப்பு உள்ளது. ஆகையால் திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் பார்க்க தான் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்
விஜய் கடைசியாக வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு தான் இப்போது ரசிகர்களிடம் இருந்து வருகிறது. விஜய்யின் இறுதி படம் என்பதால் எல்லோருமே மிகுந்த ஆர்வமாக இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
500 கோடியை நெருங்காத கோட் வசூல்