திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அஜித்துக்கே Tough கொடுக்க போகும் Rugged ஹீரோ.. குட் பேட் அக்லி டக்கர் அப்டேட்

குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அவர் பிஸியாகி உள்ளார்.

படத்தில் திரிஷா இணைத்துள்ளது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், மேலும், யார் யார் இந்த படத்தில் கேமியோ செய்வார்கள் என்றும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் தற்போது நடிகர் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஸ்பெயின் சென்றுள்ளனர். அஜித் திரிஷா இருவரும் அங்கு தான் இருக்கிறார்கள்.

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்த நிலையில் இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குட் பேட் அக்லி மிரட்டல் வில்லனாக அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, புதிய வரவாக நடிகர் பிரசன்னாவும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தற்போது கூடுதல் அப்டேட் ஆக கிடைத்துள்ளது.

arjun-das-master-cinemapettai
arjun-das-master-cinemapettai
prasanna-cinemapettai
prasanna-cinemapettai

இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்தின் அடுத்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தை மிகப்பெரிய ஹிட்டாக ரசிகர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட அர்ஜுன் தாஸ் அவர்கள் இந்த படத்தில் எப்படி மிரட்ட போகிறார் என்று பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது.

Trending News