திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரூ. 200 கோடிக்கும் மேல் சம்பளம்.. விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கும் ரஜினி , கமல்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டி என்றாலும் இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் இன்று விஜய், அஜித்திற்கே சம்பளம் விவகாரத்தில் டஃப் கொடுத்துக் கொண்டிருப்பது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர வர மூத்த நடிகர்களுக்கான மார்க்கெட்டும் வாய்ப்புகளும் குறைவது என்பது ரசிகர்களின் மன நிலையைப் பொறுத்து அது மாறுபடும். ஆனால், எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருவரின் படங்களுக்கும், அவர்களின் ஆளுமைக்கும், பட ரிலீஸின் போது இருவரின் ரசிகர்களும் பேசிக் கொள்வார்களோ அதேபோல், அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் மீது ரசிகர்கள் கவனம் குவிந்தது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் கமல் படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வந்தாலும், அவர் பைரவி படத்தின் மூதல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அடுத்தடுத்து, கமல்ஹாசனுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அவரது மேனரிசம், ஸ்டைல், இயக்குனர்கள் அமைய கமல்ஹாசனை வசூலிலும், சம்பளத்திலும் முந்தி, சூப்பர் ஸ்டாராக 40 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார்.

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை ரஜினியின் புகழ் பரவியுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருக்கு மரியாதையும், அவர் படங்களுக்கான வசூலும் அதிகரித்து வருகிறது. அண்ணாத்த படம் வரை சுமாரான படங்களாக இருந்த நிலையில், ஜெயிலரில் கமலின் விக்ரம் படம் வசூலை முறியடித்து மீண்டும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இந்த வயதிலும் வலம் வருகிறார் ரஜினி.

தானும் சளைத்தவன் அல்ல என்று ரஜினிக்குப் போட்டியாக கமலும், மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வரும் தக் லைப் படத்தில் அவர் சம்பளமாக இல்லாமல், படத்தின் புராஃபிட்டில் லாபம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்தின் லாபத்தின் மூலம் மட்டும் கமல் மற்றும் மணிரத்தினத்திற்கு தலா ரூ. 200 கோடிக்கு மேல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி படம் கூலி, இதில் நடிக்க ரூ. 280 கோடி வரை ரஜினி சம்பளம் கேட்டதாகவும், இதற்கு முன்னதாக நெல்சன் கூட்டணியில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்த நிலையில் அப்படத்திற்கு ரூ. 210 கோடி சம்பளம் கொடுப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் வசூல் மன்னனாக உள்ள விஜய்க்கு லியோ படத்தில் ரூ.200 கோடியும், சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் நடிக்க ரூ.230 கோடியும், அடுத்து ஹெச்.வினோத் இயக்கவுள்ள அவரது கடைசிப் படமான விஜய்69 படத்தில் நடிக்கர் ரூ.275 கோடி பிளஸ் ஜிஎஸ்டியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Rajini kamal viral pic

இந்த நிலையில், ரஜினிக்கு டஃப் கொடுப்பது போல கமல்ஹாசனுன் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என்று பிஸியாக இருந்தாலும் அவரும் அட்லீ இயக்கும் படத்தில், சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் கமலுக்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் தான் கோலிவுட்டில் நம்பர் 1 என்று கூறப்படும் நிலையில், விஜய் அஜித் ஆகிய இருவரும் ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் உச்ச நடிகர்கள் என்று கூறப்படும் நிலையில் அவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் நடிகர்களாக அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இருவரும் உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல், ரஜினியோடு நடித்த நடிகர்கள், அவர்களுக்கு பின்னால் வந்த நடிகர்கள் எல்லாம் தங்கள் மார்க்கெட் டவுனாகி, துணைக்கதாப்பாத்திரங்களில் நடிக்க இவர்கள் இன்னும், ஆக்சன் ஹீரோக்களாக நடித்து உச்ச நடிகர்களாக சம்பளம் பெற்று, வசூலிலும், மார்க்கெட்டிலும் சாதனை படைக்க அவர்களின் திறமை தான் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்..

Trending News