புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

இளம் வயதில் திடீர் மாரடைப்பு, அதிர்ச்சி தரும் காரணங்கள்.. எப்படி நம்மள காப்பாற்றி கொள்வது!

இந்த உலகத்தில் நம்மைப் படைத்தவன் நம்மைப் பூமிக்கு அனுப்பிவைத்து விட்டான். மீண்டும் அவர் எப்போது நம்மை அழைத்தாலும் மேலே போய்த்தான் ஆக வேண்டும் என்று கூறுவர். ஒருவேளை ஒருவர் மரணம் எய்திவிட்டால் அவர் இளம் வயதில் அகால மரணமடைந்தாலும் சரி, முதியவராக வயது முதிர்வால் காலமானாலும் சரி 16வது நாள் அல்லது 40 வது நாளில் நினைவுகூருவதற்கும், மரியாதை செய்வதற்கும் என கூறப்படுகிறது.

இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை மையப்படுத்தி இருக்கும் நிலையில் இதற்கிடைப்பட்டதுதான் உலக வாழ்க்கை. வாழ்க்கையில் எல்லோரும் ஆயிரம் கஷ்டம் வரும், இன்பம் வரும். ஆனால் இதைத்தாண்டி வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும், குறிப்பாக நோய், நொடிகள் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று சித்தர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரும் வழிகாட்டியுள்ளனர்.

அந்த ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே அகால மரணத்தைக் குறைக்க முடியும். அந்தக் காலம் போல் இன்றைய கால இளைஞர்களும், அவர்களுக்கான ஆயுளும் இல்லாததற்கு, இயற்கையான உணவுகள் குறைந்து ரசாயன உணவுகள் மிகுந்துள்ளதை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். இதனால் இளைஞர்களுக்கு குழந்தை பாக்கியம், பெண்களுக்கு சுகப் பிரசவம் இதெல்லாம் நாம் உண்ணும் உணவுமுறையில் இருந்து வருகிறது என்று கூறுகின்றனர். எனவே உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.

ஒருவர் எத்தனை திடகாத்திரமாக இருந்தாலும் நேரம் தவறாமல் டயட்டை மெயின்டெயின் செய்து, பத்திரமாக உடலைப் பேணினாலும், உடற்பயிற்சிக் கூடத்தில் திடீரென்று மரணிப்பதும்கூட ஆச்சயர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த அவசர யுகத்தில், ஆடம்பரமும், உணவு மற்றும் வேலை, உறக்கம் இவையெல்லாம் மாறிப்போயுள்ள இன்றைய காலத்தில் இந்த அகால மரணமும், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்புகளுக்கான காரணங்கள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இந்த நிலையில், இதய நோய் மற்றும் இளம் வயதில் அகால மரணம் குறித்து, மருத்துவர் கூறியுள்ளதாவது: ‘’இதய நோய் வருவது என்பது சமீபத்தில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உணவுப் பழக்கம், உறக்கம், பணிச் சூழல் இவையெல்லாம் மாறியதுதான் காரணம். இந்த இதய நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்றால், ‘உணர்வூப்பூர்வமாக சாப்பிட்ட வேண்டும், நிறைய காய்கறிகள், தோல் நீக்கப்படாத தானியங்கள் நிறைய சேர்க்க வேண்டும். சிக்கன், மீன் இவற்றைச் சாப்பிட வேண்டும். ஆனால் பாக்கெட்டில் இருந்து வரும் உணவுகள், சுகரிங் ஐயிட்டமாக உள்ளவை, பாட்டிலில் அடைக்கப்பட்டவைகள், ஜூஸஸ், பிரைட் உணவுகள், சிப்ஸ், பேக்கேஜ் உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும்.

அதுபோக நீங்கள் சாப்பிடும் உணவுகள், எவ்வளவு தூரம் உங்களுக்கு கலோரி தேவை, நீங்கள் அதை எப்படி அந்த கலோரிகளை எரிக்கிறீர்கள். அதாவது, உடலுழைப்பு தேவை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, வாரத்திற்கு மூன்று நாள் உடல் வலிமைக்கான பயிற்சி ஆகியவறை தினமும் தேவை. புகைப்படித்துக் கொண்டிருந்தால் அதைவிட்டுவிட முயற்சி செய்யுங்கள். எந்த வகையில் நிகோட்டின் எடுத்தாலும் அது தீயவைதான். நண்பர்கள் புகைப்பிடிக்கும்போது அருகில் இருந்தாலும் அது நமக்கும் நுரையீரலுக்கும் தீங்குதான்.

35 வயதிற்கு பிறகு கொலஸ்ட்ரால், சுகர், பிளட் பிரசர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் இருந்தால் அதைக் குறைக்க வேண்டும். நல்ல தூக்கம் இதயம், மூளை, மனம், உடல் நிலைக்கு உதவும், எனவே தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஐடியல் பாடி எடையை மெயின்டெயின் பண்ண வேண்டும். ஸ்பைசி, ஆயில் உணவுகள் சாப்பிட்டால் கேஸ் பிராப்ளம் வரும். ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்த பின்னும் ஒருவருக்கு ஹார்ட் அட்டேக் வரலாம்.

இது வாழ்க்கை முறையைப் பொறுத்துதான் உருவாகிறது. சைலன்ட் ஹார்ட் என்பது ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறி இல்லாமல் வருவது தான் இது. இது நீண்டகால நீரிழிவு நோயாளிக்கு, வயது முதிர்ந்த பெண்களுக்கும் வரலாம். இசிஜி, எக்கோ, சிடி ஆஞ்சியோ ஆகிய பரிசோதனைகள் செய்து இதய நோய் சம்பந்தமாக முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்’’.

மேலும், ”டான்ஸ் ஆடும்போது, விளையாடும் போது இளம் வயதில் மாரடைப்பு வந்து உயிரிழக்கின்றனர். பிளட் வெசலில் கொழுப்பு அடைத்து மாரடைப்பு வருவதற்க்கான காரணம் குறைவு. சின்ன வயதில் இறக்கிறவர்களுக்கு பிறக்கும்போதே இதயத்தில் பாதிப்பு இருந்திருக்கலாம். அது தெரியாமல் இருந்திருக்கலாம். இதுதான் இளவயது மரணத்திற்கு காரணம். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதற்கு முன் இதயம் சார்ந்த நோய் இருந்தால் இளையவர்கள் போய் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இளம் வயதில் இதய நோயை சரிசெய்ய, ஹெல்தியாக சாப்பிட்டனும், ஆக்டிவாக இருக்கனும், ஐடியல் பாடியை மெயின்டெயின் பண்ணனும், ஸ்மோகிங்கை நிறுத்தனும், ஸ்ட்ரெஸை ரிலீஃப் பண்ணும், நன்றாக தூங்கனும், உடல் நிலையை சீராக வைத்துக் கொண்டால் இதிலிருந்து விடுபடலாம்’’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News