சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

குடித்துவிட்டு டார்ச்சர் செய்த வீரம் பட நடிகர்.. மகள் வைத்த பகிரங்க குற்றச்சாட்டு

Veeram Movie Actor: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அப்படம் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

அதில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் தான் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு, காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர் அம்ருதா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மகள் குறித்து உருக்கமாக பேசிய பாலா

இந்த சூழலில் தான் அவருடைய மகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என் அப்பா என்னை மிஸ் செய்வதாகவும் நேசிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரை நேசிப்பதற்கான ஒரு சின்ன காரணம் கூட என்னிடம் கிடையாது.

அவர் குடித்துவிட்டு என் அம்மாவை அடித்து டார்ச்சர் செய்த நினைவுகள் தான் இருக்கிறது. அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த வலியும் வேதனையும் இப்போதும் என்னால் உணர முடிகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பாலா தன் மகள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீ வயிற்றில் 5 மாத கருவாக இருக்கும் போது உனக்கு பெயர் வைத்து அழகு பார்த்தேன். எப்போதுமே நீ எனக்கு குழந்தைதான். உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.

இனிமேல் உன் வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இரு தரப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பட நடிகர் வெளியிட்ட வீடியோ

Trending News