ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தலைவரின் நிலைக்கு லோகேஷ் தான் காரணமா.? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

Rajini-Lokesh: இன்று காலையிலிருந்து ரஜினி ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இதற்கு காரணம் தலைவர் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டது தான். இந்த செய்தி வெளியானதிலிருந்து பலரும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

அதேபோல் நம் முதல்வர் கூட சூப்பர் ஸ்டார் விரைவில் நலம் பெற வேண்டும் என ட்வீட் செய்திருந்தார். மேலும் தலைவருக்கு சாதாரண பரிசோதனை தான் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த சூழலில் வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர் ஸ்டாரின் இந்த நிலைக்கு லோகேஷ் தான் காரணம் என அவர் குறிப்பிட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ரஜினி நடிப்பில் வரும் 10ம் தேதி வேட்டையன் வெளிவர இருக்கிறது. அதை அடுத்து கூலி படம் தயாராகி வருகிறது. அதன் படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.

அந்தணன் கூறிய அதிர்ச்சி தகவல்

அதன்படி சூப்பர் ஸ்டார் மழையில் நனைந்தபடி சண்டை போடும் ஒரு காட்சியை லோகேஷ் படமாக்கி இருக்கிறார். அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ரஜினி என்னதான் சுறுசுறுப்பாக இருந்தாலும் தற்போது அவர் 74 வயதை தொட்டுவிட்டார்.

இதனால் சாதாரணமாகவே சில உடல் நல பிரச்சனைகள் வரும். அதன்படி மழை காட்சி தான் அவருடைய உடல் நலக்குறைவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இத்தனைக்கும் குளிர்ந்த நீர் வேண்டாம் என வெதுவெதுப்பான நீரை வைத்து தான் காட்சியை லோகேஷ் படமாக்கி இருக்கிறார்.

இருந்தாலும் ரஜினிக்கு அது ஒத்துக் கொள்ளவில்லை என அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும் கூலி பட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அந்த ஊர் தண்ணியும் ரஜினிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் சென்னையில் இருந்து அவருக்கு தண்ணீர் வரவழைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் அந்தணன் கூறியுள்ளார். அதேபோல் ரஜினி என்பவர் இளைஞர் மாதிரி தான். ஆனால் இளைஞர் கிடையாது. இதை மனதில் வைத்துக் கொண்டு இயக்குனர்கள் படம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி

Trending News