Jayam Ravi : கடந்த 10 நாட்களுக்கு மேலாக இணையத்தை ஆட்கொண்டிருந்த விஷயம் தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வைத்து வருவதால் மற்ற பிரபலங்கள் எரிகிற நெருப்பில் குளிர் காய்ந்து வருகிறார்கள்.
இவர்களின் விவாகரத்திற்கு காரணம் இதுதான், அதுதான் என்று வாய்க்கு வந்தபடி ஏதாவது பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் ஆர்த்தி தன் மீது சுமத்தப்படும் குற்றத்திற்கு முதலில் மறுப்பு தெரிவிப்பது என்னுடைய உரிமை என்ற அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதோடு ஜெயம் ரவியுடன் விவாகரத்திற்கு தனக்கு சம்மதம் இல்லை என்றும் அவருடன் தனியாக பேச அனுமதி கேட்டு இருப்பதாக கூறியிருந்தார். இந்த சூழலில் ஆர்த்தியின் வீட்டில் 100 கோடிக்கு மேல் ஜெயம் ரவிக்காக அழிச்சு உள்ளதாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவிக்காக ஆர்த்தி வீட்டில் 100 கோடியை அழிச்சாங்க
அதாவது ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு, பூமி மற்றும் சைரன் ஆகிய படங்களை தயாரித்து இருந்தார். அடங்கமறு மற்றும் பூமி படங்கள் தோல்வியை தழுவியது.
சைரன் படம் மட்டும் தான் ஓரளவு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படங்களை தயாரித்ததால் சுஜாதா விஜயகுமாருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக செய்யாறு பாலு ஒரு யூட்யூப் பேட்டியில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ஏற்கனவே ஜெயம் ரவி பேசி உள்ள நிலையில், தான் நடித்த படங்கள் எல்லாமே நஷ்டத்தை சந்தித்ததாக ஆர்த்தின் அம்மா சொன்னார். ஆனால் வேறு ஒருவரை வைத்து கணக்கு பார்க்கும் போது எல்லாமே லாபத்தை தான் கொடுத்து இருந்ததாக ஜெயம் ரவி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓயாத ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி
- வீட்டு வேலைக்காரர்கள் முன் அவமதிக்கப்பட்ட ஜெயம் ரவி
- ஆர்த்தியால் ஜெயம் ரவி, தனுஷுக்கு சண்டை, புதிய புரளியை கிளப்பும் விபூதி மண்டை
- ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து பெரும் பிரபல நடிகை