சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாங்க.. வனிதாவை வம்புக்கு இழுத்த பிரபலம்

Vanitha Vijayakumar: நேற்று இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட புகைப்படம் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தான். பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராபர்ட் மாஸ்டர் உடன் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதோடு அக்டோபர் ஐந்தாம் தேதி சேவ் த டேட் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் இருவருக்கும் அந்த நாளில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் கசிந்தது. ராபர்ட் மாஸ்டர், வனிதா பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் நிறைய வெளியாகி இருந்தது.

ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் செல்ல வனிதா தான் சிபாரிசு செய்தார். ஆனால் நடுவில் இருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனை நடைபெற்றது. இப்போது மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அதற்கான போஸ்டரை தான் வனிதா வெளியிட்டு இருக்கிறார்.

வனிதாவை விமர்சித்த பிரபலம்

ப்ரோமோஷனுகாக இதே போன்று வனிதா சர்ச்சையான போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். இதனால் பலரும் பீட்டர் பாலுக்கு பிறகு ராபர்ட் மாஸ்டரை வனிதா கல்யாணம் செய்து கொள்ள உள்ளார் என்று கொளுத்தி போட்டுள்ளனர். மேலும் இது குறித்து பயில்வான் ரங்கநாதனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு 50 வயசு வனிதா திருமணம் செய்து கொண்ட என்ன செய்யப் போகிறார் என்று நக்கல் அடித்துள்ளார் பயில்வான். சும்மாவே வனிதா தன்னை சீண்டியவர்களை வறுத்தெடுக்கும்படி கமெண்ட்களை தெறிக்க விடுவார். இப்போது பயில்வால் வனிதாவின் வாயில் விழுந்திருக்கிறார்.

கண்டிப்பாக பயில்வானை விமர்சித்து வனிதா வீடியோ வெளியிடுவார். மேலும் பலரும் ஒரு படத்தின் ப்ரோமோஷனுகாக வனிதா இவ்வாறு ராபர்ட் மாஸ்டருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் என்பது அவர் மீது மேலும் விமர்சனத்தை வைக்க வனிதாவே வழி விடுகிறார் என்று கருத்து தெரிவித்தார்கள்.

ராபர்ட் மாஸ்டருடன் பிக் பாஸ் வனிதா

Trending News