வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. படத்தின் டிரைலர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி மற்றும் டிஜே ஞானவேல் இந்த படத்தில் மைனஸாக கருதப்படும் விஷயங்களை சரி செய்து வருகின்றனர்.
இந்த படம் பான் இந்தியா படமாக வெளிவருவதால் எப்படியும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகிவிடும். எக்காரணத்திற்காகவும் இயக்குனர் ஞானவேல் கதையை விட்டுக் கொடுக்க மாட்டார். கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் என இவர் இயக்கிய படங்கள் எல்லாம் தனித்துவமானது.
எப்பொழுதுமே கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஞானவேல் இந்த முறை ரஜினியை வைத்து இயக்கியதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ரஜினி காசு போட்ட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுவார்.
டபுள் ஹேப்பி மூடில் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே அது கமர்சியல் கலந்த கதையாக தான் இருக்கும். இந்த முறை வேட்டையன் படம் அப்படி இருக்காது, இது ஒரு மாறுபட்ட கதைக்களம் என்கிறார் ஞானவேல். அதுமட்டுமின்றி இந்த படத்தில் ரஜினியின் 40 வருட கால நண்பர் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்தில் அமிதாபச்சனுக்காக குரல் கொடுத்தது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ். ஆனால் ஒரு பான் இந்தியா படத்தில் அமிதாப்பச்சனுக்கு இவர் குரல் கொடுத்தது பெரிதும் நெகட்டிவாக பேசப்பட்டது. இப்பொழுது அதை சரி செய்வதற்காக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமிதாப் பச்சன் குரலையே உருவாக்கி, அனைத்து மொழிகளுக்கும் பொருந்துமாறு செய்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே இந்த விஷயம் உறுத்தலாக இருந்ததால், இப்பொழுது சரி செய்த பின் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
- வேட்டையன் ஆடியோ வெளியீட்டுக்கு வரும் விஐபி
- இந்தவாட்டி தலைவர் ஆடு கதை சொல்வாரோ
- வேட்டையன் படத்தையும் விட்டு வைக்கல, சம்பவம் செய்த வசந்தி