பித்ரு தோஷத்தை போக்கும் புரட்டாசி மகாளய அமாவாசை.. சிறப்புகளும், வழிபாட்டு முறையும்

Purattasi Mahalaya Amavasya: அமாவாசை என்றாலே விசேஷமான நாள் தான். அன்றைய நாளில் நம் முன்னோர்களை நினைத்து படையலிட்டு வழிபடுவதை தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஆனால் மூன்று அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

அதன்படி தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை ரொம்பவும் விசேஷமானது. இதில் இறந்து போன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாள் தான் ஆடி அமாவாசை. அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் தான் மகாளய அமாவாசை எனப்படுகிறது.

அவர்கள் திரும்பி பித்ருலோகத்திற்கு செல்லும் நாள் தை அமாவாசை ஆகும். இதில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்திற்கு பின் பல சிறப்புகள் இருக்கிறது. மகாளயம் என்றால் கூட்டாக வருதல் என்பதாகும்.

மறைந்த முன்னோர்கள் ஒன்றாக கூடும் காலம் தான் மகாளய பட்சம் என கூறப்படுகிறது. இதில் பட்சம் என்பது 15 நாட்களை குறிக்கும். அதாவது புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்திற்கு மறுநாளில் ஆரம்பித்து அமாவாசை வரும் 15 தினங்கள் ரொம்பவும் முக்கியமானது.

சக்தி வாய்ந்த புரட்டாசி மகாளய அமாவாசை

அந்த நாட்களில் முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள் என்கிற ஐதீகமும் உண்டு. அன்றைய தினங்களில் நாம் முன்னோர்களுக்கு உணவு படைத்து வழிபடுவது குடும்பத்திற்கும் சந்ததிகளுக்கும் மிகவும் நல்லது.

இதன் மூலம் நம்முடைய வழிபாட்டை முன்னோர்கள் ஏற்றுக்கொண்டு நாம் கேட்கும் வரங்களை தருவார்கள் என்கிறது சாஸ்திரம். மேலும் அமாவாசை தினத்தில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது முக்கியமாகும். அதேபோல் இறந்து போன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்.

அது முடியாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து செடிகளின் மீது எள்ளும் தண்ணீரும் விடலாம். அதன் பிறகு முன்னோர்களுக்கு உணவு படையல் இட்டு வழிபடுவதன் மூலம் அவர்களை திருப்தி படுத்த முடியும்.

அதேபோல் இந்த புரட்டாசி மகாளய அமாவாசையில் மற்றொரு சிறப்பும் உள்ளது. அதாவது இன்றைய தினத்தில் நம்முடைய வழிபாடு மூலம் பித்ரு தோஷம், சாபங்களை நீக்க முடியும். அப்படிப்பட்ட ஆற்றல் இந்த புரட்டாசி அமாவாசைக்கு உண்டு.

அமாவாசை தினத்தின் சிறப்புகளும் வழிபாடும் முறையும்

- Advertisement -spot_img

Trending News