Serial : சன் டிவியில் டிஆர்பியை அள்ளிக் கொடுத்த சீரியல் என்றால் எதிர்நீச்சல் தொடர் தான். திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த போது டிஆர்பி ரேட்டிங் உச்சம்.
திடீரென மாரிமுத்து மறைந்தது சீரியலுக்கு பெறும் அடியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வந்தார். மேலும் இந்த தொடருக்கு தூண்களாக இருந்தது மருமகள்கள் தான்.
இதில் வரும் நான்கு மருமகள்களின் கதாபாத்திரமும் மிகவும் எதார்த்தமாக இருக்கும். அந்த வகையில் மூத்த மருமகளாக நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாவதாக பிரியதர்ஷினி ரேணுகா கதாபாத்திரத்திலும், மூன்றாவதாக ஹரிப்பிரியா நந்தினி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் 2 தொடரில் பங்கு பெறாத மருமகள்
கடைசி மருமகள் அதாவது தொடரின் கதாநாயகியாக மதுமிதா ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது சீசனை எடுக்கும் முயற்சியில் திருச்செல்வம் இருந்து வருகிறார்.
இதில் மதுமிதா நடிக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மதுமிதா இப்போது படம் மற்றும் வேறு தொடர்களில் கமிட்டாகி இருக்கிறார். ஆகையால் எதிர்நீச்சல் 2 தொடருக்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.
இதன் காரணமாக எதிர்நீச்சல் சீசன் 2வில் மதுமிதா இடம்பெற மாட்டார் என்ற தகவல் கசிந்திருக்கிறது. அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை இப்போது இயக்குனர் தேடி வருகிறாராம். ஆகையால் மிக விரைவில் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
டிஆர்பியில் ஆட்டிப்படைத்த எதிர்நீச்சல்
- எதிர்நீச்சல் 2க்கு அஸ்திவாரம் போட்ட ஜீவானந்தம்
- எதிர்நீச்சல் சீரியலை மறக்கடிக்க செய்த சன் டிவியின் புத்தம் புது சீரியல்
- விவேக், எதிர்நீச்சல் குணசேகரனுக்கு உள்ள ஒற்றுமை