Suriya-Jyotika: நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். இருவருக்குமே படிப்பை தாண்டி பல திறமைகள் இருக்கிறது. இது அவ்வப்போது போட்டோ வீடியோ வடிவில் ரசிகர்களின் பார்வைக்கு வரும்.
அந்த வகையில் தற்போது சூர்யா ஜோதிகாவை பெருமைப்படுத்தும் வகையில் சர்வதேச அளவில் விருதை வென்றுள்ளார் தியா. தற்போது 17 வயதாகும் இவர் மும்பையில் படித்து வருகிறார்.
அம்மா அப்பாவை போல் இவரும் நடிக்க வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் தன்னுடைய என்ட்ரி எப்படி இருக்கும் என காட்டி இருக்கிறார் தியா. அதாவது தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் இயக்கியுள்ள லீடிங் லைட் என்ற குறும்படத்திற்கு திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்துள்ளது. அதன்படி சிறந்த ஆவண படத்திற்கான விருது மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதையும் தியா தட்டிச் சென்றுள்ளார்.
தியாவுக்கு கிடைத்த விருது
திரைக்குப் பின்னால் இருக்கும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன என்பதை தான் இந்த குறும்படம் காட்டுகிறது. மாணவர்களுக்காக நடந்த இந்த போட்டியில் அவர் வென்றிருப்பதை ஜோதிகா பெருமையுடன் தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படி ஒரு ஆவணப் படத்தை இயக்கியதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. உன்னை நினைத்தது பெருமைப்படுகிறேன் என ஒரு தாயாக அவர் மகிழ்ந்துள்ளார்.
இதன் மூலம் சிவகுமார் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறை சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகாவுக்கு கிடைத்த பெருமை
- 3 படத்தை வரிசையாய் வெளியிடும் சூர்யா
- கங்குவா ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா
- தளபதியின் இடத்தை பிடித்த சூர்யா