ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா விஜய்.. விதிகளை மீறினாரா? கிளம்பிய அடுத்த பிரச்சனை

Thalapathy Vijay: விஜய்யின் கடைசிப் படம் ‘விஜய்69’ பற்றி பேசும்போதே சென்டிமென்ட்டாக ரசிகர்கள் நினைக்கும்போது, இப்படம் பூஜை தொடங்கும் முன்பே இப்படத்திற்கு புதிய சர்ச்சை எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கேவிஎன் புரடக்சன்ஸ்’ தயாரிப்பில் விஜய்யின் கடைசிப் படமான விஜய்69 உருவாகவுள்ளது. அவரது அரசியல் வருகைக்கும் வரும் 2026 தேர்தலுக்கு அடித்தளமான அரசியல் கதைக்களத்துடன் இப்படம் உருவாகவுள்ளதாகவும், விஜய்யை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சமூக அக்கறை கொண்ட படமாக இப்படத்தை ஹெச்.வினோத் செதுக்கி வருவதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ஸ்டார் காஸ்டிங் பட்டியலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் ‘அனிமல்’ பட பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரை அறிமுகம் செய்துள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகும் நியலியில், இனி நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்படவுள்ளனர்.

இப்படத்தின் பூஜை அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். வரும் 5 ஆம் தேதிதான் விஜய் ஷூட்டிங்கு கிளம்புவதாகவும், இப்படத்தின் பாடல் காட்சிக்காக பையனூரில் ஷூட்டிங் செட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இளம் ஹீரோக்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் விஜய் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்திற்கு பூஜை போட்டவர்கள்தான் இப்போது ஷூட்டிங் எடுக்க முடியும். அது நவம்பர் வரை மட்டும்தான் எடுக்க முடியும். டிசம்பரில் ஷூட்டிங் எடுக்க முடியாது.

அதாவது ஆகஸ்ட் 15க்குப் பிறகு பூஜை போட்டவர்கள் ஷூட்டிங் போகக் கூடாது என்பதுதான் கவுன்சில் போட்ட உத்தரவு. இது இப்படியிருக்க, விஜய்69 படத்திற்கு 4 ஆம்தேதி பூஜை போட்டு, 5 ஆம் தேதி கிளம்புகிறார்கள் என்றால் விஜய் படத்திற்கு மட்டும் என்ன விதிவிலக்கா? என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னரே ஆபீஸ் பூஜை இப்படத்திற்குப் போடப்பட்டதாக கூறப்பட்டாலும், படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதனால் எளியவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அதனால் விஜய் படமும் கவுன்சில் விதிகளை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News