வேட்டையனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு.. ரிலீஸில் சிக்கல், அதிர்ச்சியில் ரஜினி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ‘ஜெய்பீம்’ இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மஞ்சுவாரியர், துஷாரா விஜயன்,பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி, ரோகிணி, ரித்திகா சிங், அமிதாப் பச்சன், பகத்பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இதன் டிரைலர் நேற்று மாலை சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியானது. இந்த டீசருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து இதுவரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த டிரைலரை பார்வையிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டாருக்கு 74வயதாகும் நிலையில் இப்படத்தில் இளைமையுடன் இளைய நடிகர்களுக்கு சவால் விடுவதுபோல் அவரது ஸ்கீர்ன் பிரசன்ஸ் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளையொட்டி இப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இந்த நிலையில், வேட்டையன் டிரைலர் நேற்று ரிலீஸான நிலையில் இன்று இப்படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை இன்றே தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

வேட்டையன் படத்தின் டீசரில், என்கவுண்டர் தொடர்பாக வசனங்கள் உள்ளன. அதில், அதை நீக்க வேண்டும்; அதை நீக்கும் வரை, ரஜினியின் வேட்டையன் படத்தை வெளியிட அனுமதி அளிக்க கூடாது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக் இன்றே விசாரணைக்கு வருகிறது.

ரஜினியின் 170-வது படமான இப்படத்தின் டீசரின் போதே என்கவுண்டர் வசனத்திற்கு எதிராக பலரும் விமர்சித்தனர். அதை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்த நிலையில், இப்போது டிரைலரில் அதே வசனங்கள் இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு கூறி வரும் நிலையில் என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பழனிவேலு வழக்குத் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் பட டிரைலர் நேற்று வெளியான நிலையில் என்கவுன்டரை ஆதரிப்பது போல் ரஜினிகாந்த் பேசும் வசனங்களுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட விவகாரம் வேட்டையன் படக் குழுவினர் மற்றும் சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment