Home Tamil Movie News விஜய்க்கு நியாயம் தனுசுக்கு அநியாயமா.. தளபதி 69  படம் மட்டும் விதிவிலக்கா?

விஜய்க்கு நியாயம் தனுசுக்கு அநியாயமா.. தளபதி 69  படம் மட்டும் விதிவிலக்கா?

vijay-dhanush
vijay-dhanush

தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. படத்திற்கு பூஜை அக்டோபர் 4ஆம் தேதி போடுகின்றனர். ஆனால் தற்சமயம் தயாரிப்பாளர்கள் புதுப்படங்கள் தொடங்கக்கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

நடிகரின் அதிக சம்பள உயர்வு, தயாரிப்பாளர்கள் தொடர்ந்து  நஷ்டம் அடைவது, பெரிய ஹீரோ படங்களின் OTT ரிலீஸுக்குப் பின்னால் உள்ள விதிமுறைகள், உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்ப்பு கோரும் விதமாக போராட்டம் நடந்து வருகிறது.

நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு புது படங்களின் சூட்டிங்  நடத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். ஆனால் ஆகஸ்ட் 15க்கு முன் தொடங்கப்பட்ட படங்கள் மற்றும்  பூஜை போட்ட படங்கள் போன்றவற்றிற்கு மட்டும்  அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால்  இப்பொழுது விஜய் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி இப்பொழுது வருகிறது. 

தளபதி 69  படம் மட்டும் விதிவிலக்கா?

ஏற்கனவே தனுஷின் இட்லி கடை படத்திற்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனையை தூண்டி விட்டனர். அந்த படத்தின் சூட்டிங் தடைக்காலத்தில் ஆரம்பிக்கக் கூடாது  என பிரச்சனை செய்தனர். ஆனால்  தனுஷ் ஏற்கனவே இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது, என சிசிடிவி  புட்டேஜ்களை காட்டி அனுமதி வாங்கினார்.

 இப்பொழுது விஜய் 69 படம் பயனூரில் சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். அதற்காக ஒரு பிரம்மாண்ட செட் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு பாடல் காட்சிகள் எடுக்க இருக்கிறார்கள். விஜய் படத்திற்கு மற்றும் தடை இல்லையா. கடைசி படம் என்பதால்  விஜய்க்கு மட்டும் சலுகைகள் கொடுக்கிறீர்களா என தற்சமயம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.