திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நங்கூரம் போல் நச்சுன்னு அமைந்த கூட்டணி.. தளபதி 69ல் இணைந்த 7 பிரபலங்கள்

Thalapathy 69: விஜய்யின் கோட் ஆரவாரம் எல்லாம் முடிந்து தற்போது தளபதி 69 அப்டேட் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் இணைந்துள்ள முக்கிய பிரபலங்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பு கடந்த இரு நாட்களாக வெளியிட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்திருந்தது.

அந்த வகையில் நாம் எதிர்பார்த்தது போலவே தளபதி 69 இல் பாலிவுட் பிரபலம் பாபி தியோல் இணைந்துள்ளார். ஏற்கனவே கங்குவாவில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் விஜய்யுடன் இணைந்து இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

அஸ்திவாரத்தை பலமாக போட்ட H.வினோத்

இவருக்கு அடுத்தபடியாக தளபதியுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி போட்ட பூஜா ஹெக்டேவும் இரண்டாம் முறையாக இணைந்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் மமிதா பைஜூ, இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இப்படி ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் நிலையில் கடைசி மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய்க்கு சரியான வில்லன் என பெயர் வாங்கிய பிரகாஷ்ராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் கில்லி, சிவகாசி என பல படங்கள் சக்கை போடு போட்டது. அந்த காம்போ மீண்டும் இணைந்ததில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இப்படி முக்கிய பிரபலங்களை இணைத்து இருக்கும் எச் வினோத் எந்த மாதிரியான படத்தை தர போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது.

தளபதி 69 இல் இணைந்த முரட்டு கூட்டணி

Trending News