Sandhya : பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தை தற்போது வரை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. முதல் படமே இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு சில படங்களில் சந்தியா நடித்தாலும் காதல் அளவுக்கு எந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.
சந்தியா சென்னையில் கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்த சந்திரசேகர் என்பவரை குருவாயூர் கோயிலில் கடந்த 2015 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 2016இல் இவர்களது வரவேற்பு சென்னையில் நடக்க இருந்தது.
அப்போது வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்ட நிலையில் தனது வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு சந்தியா வழங்கியிருந்தார். மேலும் சந்தியாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தியா சைடு கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
காதல் சந்தியாவின் குடும்ப புகைப்படம்
மேலும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அவ்வாறு சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது அவரை படங்களில் பார்ப்பது அரிதாக இருக்கிறது.
இந்நிலையில் சந்தியாவின் குடும்ப புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அவருடைய கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் தான் அது. இத்தனை வருடமாகியும் சந்தியா அப்படியே பழையபடி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இப்போதும் அவர் ஹீரோயினாக நடிக்கலாம், மீண்டும் நிறைய படங்களில் உங்களை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். நல்ல நடிப்பு இருந்தாலும் நேரம் மற்றும் கால சூழ்நிலை காரணமாக சந்தியாவால் பெரிய அளவில் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது.
சந்தியாவுக்கு திருப்புமுனையாக அமைந்த காதல் படம்
- பரத்தை பைத்தியமாக அலையவிட்ட சந்தியா
- ஹீரோயின் சான்ஸ் கேட்டு வந்த இளம்பெண்
- மீண்டும் காதல் உறவை புதுப்பித்த சிம்பு