Marma Desam: இப்போது பல சேனல்கள் ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகிறது. ஆனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். நகைச்சுவை, காதல், திகில், திரில்லர் என வெரைட்டிக்கு பஞ்சம் இருக்காது.
அதிலும் 90ஸ் கிட்ஸை அலறவிட்ட பெருமை இயக்குனர் நாகாவுக்கு உண்டு. அவர் இயக்கத்தில் வெளியான மர்ம தேசம் சீரிஸின் விடாது கருப்பு, ரகசியம், எதுவும் நடக்கும் என அத்தனை தொடர்களும் திகில் கலந்த மிரட்டலாக இருக்கும்.
இப்போதும் கூட அந்த நினைவுகளை யாராலும் மறக்க முடியாது. அந்த இயக்குனர் தற்போது மற்றொரு சீரிஸ் மூலம் ரசிகர்களை மிரட்ட தயாராகி விட்டார். அதன்படி அவருடைய அடுத்த வெப் சீரிஸ் ஐந்தாம் வேதம் ஜீ 5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
மர்ம தேசம் இயக்குனரின் அடுத்த சீரிஸ்
இதன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய 4 கிரகங்களும் சூரியனை பார்த்தது போல் ஒரே நேர்கோட்டில் நிற்கும். அப்போது ஒரு அதிசயம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேதம் என்பது ஒன்று அதில் பல பாகங்கள் இருக்கிறது. இதில் ஐந்தாம் பாகம் தற்போது வெளியாக போகிறது என போஸ்டரை வீடியோ வடிவில் ஜீ 5 தளம் வெளியிட்டுள்ளது. இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சீரிஸில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, ஒய் ஜி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விரைவில் இந்த வெப் தொடர் வெளியாக இருக்கிறது. தற்போது திகில் மற்றும் திரில்லர் கதைகளுக்கு செம டிமாண்ட் இருக்கிறது. அதிலும் மர்ம தேசம் இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் தற்போது 90ஸ் கிட்ஸ் ஆர்வத்துடன் இதை எதிர்பார்த்து வருகின்றனர்.
ஓடிடியில் வெளியாகும் ஐந்தாம் வேதம்
- இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 9 படங்கள்
- லால் சலாம் OTT ரிலீசுக்கு முன்பே சூனியம் வச்சிக்கிட்ட ஐஸ்
- அப்போ OTT-ல இந்த 5 படங்களை மிஸ் பண்ணாம பாருங்க.!