Lubber pandhu : தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படம் வசூல் வேட்டையாடி வருகிறது. யாரும் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெரும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது லப்பர் பந்து படம்.
ஆனால் இந்த படத்தில் டைட்டில் முதல் ஆர்டிஸ்ட் வரை லப்பர் பந்து படத்திற்கு முதல் சாய்ஸ் வேறாகத்தான் இருந்துள்ளது. முதலில் இந்த படத்தில் கெத்து கேரக்டருக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் ஜப்பான். ஆனால் இந்த டைட்டிலின் உரிமையை கார்த்தியின் படம் பெற்றிருந்துள்ளது.
அதனால் அதன் பிறகு லப்பர் பந்து என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். அதேபோல் கெத்து கேரக்டரில் முதலில் இரண்டு பிரபலங்கள் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். நட்டி நடராஜன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் உடன் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் சில காரணங்களினால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது.
லப்பர் பந்து படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள்
அதன் பிறகு தான் அட்டகத்தி தினேஷ் கெத்து கேரக்டரில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதேபோல் அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடித்த நிலையில் முதலில் ஹிப்ஹாப் ஆதி தான் ஒப்பந்தமாகி இருந்துள்ளார்.
மேலும் யசோதை கதாபாத்திரத்தில் பிரியாமணியை நடிக்க வைக்க யோசித்திருந்தனர். ஆனால் ஒரு இளம் பெண்ணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா என்ற யோசனை இருந்துள்ளது. ஏனென்றால் பிரியாமணி இப்போதும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக வரலட்சுமியை யசோதா கதாபாத்திரத்திற்கு கொண்டுவர நினைத்துள்ளனர். ஆனால் அதுவும் முடியாமல் போன நிலையில் சுவாசிக்கா இந்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். லவ்வர் பந்து படத்தின் முதல் சாய்ஸ் வேறாக இருந்தாலும் கடைசியில் படம் பக்கமாக அமைந்தது.
வசூலைக் குவிக்கும் லப்பர் பந்து
- லப்பர் பந்து 13 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா.?
- வசூலில் விளையாடும் லப்பர் பந்து
- லப்பர் பந்து நடிகர்கள் வாங்கிய சம்பளம்