ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தனக்குத்தானே ஆப்பு வைக்கும் மோசமான திட்டம் போட்ட லைக்கா.. ரஜினியை வைத்து பேயோட்ட நினைத்த மகிழ்

விடாமுயற்சி படம் ஒரு வழியாக 99 சதவீதம் முடிந்துவிட்டது. துண்டு விழுந்த வேலைகள் மட்டும் போய்க் கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டுமென தொடர்ந்து சண்டை போட்ட லைக்காவின் திட்டம் இப்பொழுது நிறைவேறி விட்டது.

அக்டோபர் 31ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது . இன்னும் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டு இருப்பதால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் டல் அடிக்கிறது. அஜித் எப்படியும் படத்திற்கான ப்ரொமோஷன்களை பண்ண மாட்டார். அதனால் மற்ற ஆர்டிஸ்ட்களை வைத்து பிளான் பண்ணி வருகிறது லைக்கா.

படம் தீபாவளிக்கு வெளிவருவதால், ட்ரெய்லர் ரெடி பண்ணுமாறு இயக்குனருக்கு ஓவர் பிரஷர் கொடுத்து வந்தது லைக்கா. இருந்தபோதிலும் ஒரு வழியாக ட்ரெய்லர் ரெடி பண்ணி விட்டார் மகிழ். இப்பொழுது இந்த ட்ரைலரை எப்பொழுது வெளியிட வேண்டும் என திட்டம் போட்டு வருகிறது லைக்கா.

ரஜினியை வைத்து பேயோட்ட நினைத்த மகிழ்

வேட்டையன் படத்தின் இன்டர்வெல் நேரத்தில் விடா முயற்சி ட்ரெய்லரை வெளியிடலாம் என மகிழ், வைக்காவிடம் ஒரு யோசனையை கூறியுள்ளார். ஆனால் ரஜினி படத்தின் நடுவே இதை செய்தால் அஜித்துக்கு இருக்கும் மாஸ் குறைந்துவிடும்.

தனியாக விடாமுயற்சி ட்ரெய்லரை வெளியிட்டால் அது பெரிய அளவில் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். ரஜினி படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் வந்தால் இதற்கு சற்று ஹைப் குறைந்துவிடும். ஆரம்பத்தில் இந்த யோசனையை லைக்கா எடுத்தாலும் அதன் பின் சுதாரித்துக் கொண்டு திட்டத்தை கைவிட்டுள்ளது.

Trending News